பிளஸ்2 தேர்வு முடிவுகள்.. தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. தேர்வு எப்போது? முக்கிய தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக துணைப் பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை மறுதேர்வுகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற +2 பொதுத்தேர்வில் மாணவிகளை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.19 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட வாரியாக பார்க்கும்போது, 98.24 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.

இந்நிலையில், மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் மே 13 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் தங்களது பள்ளிகள் மூலம் இந்த மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் மதிப்பெண்களில் திருப்தியில்லாத மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. விடைத்தாள்களின் ஸ்கேன் நகலை பெற விரும்பும் மாணவர்கள் மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். இந்த வசதி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைப் பொதுத்தேர்வு அட்டவணையின்படி, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுதேர்வுகள் ஜூன் 29 முதல் ஜூலை 7 வரை நடைபெறும். 11 ஆம் வகுப்பு அரியர் தேர்வுகள் ஜூலை 8 முதல் ஜூலை 16 வரை நடத்தப்படும். இந்த தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு மே 18 முதல் ஜூன் 2 வரை நடைபெறும்.
அதேபோல், மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் மே 6 முதல் ஜூன் 8 வரை இணைய வழியாகச் சமர்ப்பிக்கலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தேர்வு முடிவுகள், மதிப்பெண் பட்டியல் மற்றும் மறுதேர்வு தொடர்பான அனைத்து தகவல்களையும் தங்களது பள்ளிகள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications