பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 8 ல் வெளியாகாது? தாமதமாகும் ரிசல்ட்! என்ன காரணம்
சென்னை: 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரிசல்ட் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் புதிய ஆட்சி அமைந்ததும் அரசின் அனுமதியை பெற வேண்டும் என்பதால் ரிசல்ட் வெளியீடு தாமதம் ஆகியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாட்டத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 ஆம் தேதி நடைபெற்றது. 26 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் இந்த தேர்தல் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது.

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவ - மாணவிகள் இடையே நிலவி வருகிறது. ஏற்கனவே 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், மே 8 ஆம் தேதி ரிசல்ட் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரிசல்ட் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:- 12 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகள் முடிவு பெற்றுவிட்டன. மாணவ, மாணவிகளின் மதிப்பெண் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுவிட்டன. ரிசல்ட் வெளியிடுவதற்கான அனைத்து முடிவுகள் கிட்டத்தட்ட முடிக்கப்பட்டு விட்டன.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால்..
எனினும், தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. புதிய அரசு அமைந்த பிறகு அரசின் ஒப்புதலை பெற வேண்டும். இதற்கு சில நாட்கள் அவகாசம் தேவைப்படும் சூழல் உள்ளது. எனவே திட்டமிட்ட படி வரும் 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய அரசு அமைந்த பிறகு உரிய ஒப்புதல் பெற்று ரிசல்ட் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார். இதன்படி பார்த்தால் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான ரிசல்ட் வெளியாவதற்கு இன்னும் ஒருவாரம் கிட்ட ஆகிவிடும் என்றே தெரிகிறது. மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் பெறும் மதிப்பெண்களை வைத்தே உயர்கல்வியில் எந்த கோர்சில் சேரலாம் என்ற முடிவை எடுப்பார்கள்.
பெற்றோர்கள் கோரிக்கை
எனவே, தாமதம் இல்லாமல் விரைவாக வெளியிட்டால் மாணவர்கள் நன்கு ஆலோசித்து முடிவு எடுக்க கூடுதல் நேரம் கிடைக்கும் என்பதால் விரைவாக வெளியிட வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications