விசாரணையே முடியல அதுக்குள்ள ஜாமீனா'.. ராஜகோபாலன் ஜாமீன் மனு தள்ளுபடி.. போக்ஸோ நீதிமன்றம் அதிரடி!
சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனுவை சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
விசாரணை முழுமையாக முடிவடையாததால் ஜாமீன் வழங்க முடியாது என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.
3 நாள் போலீஸ் காவல் முடிந்து தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராஜகோபாலன்.

ராஜகோபாலன் கைது
சென்னை கே.கே.நகரில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த வாரம் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆன்லைன் வகுப்பில் அரைநிர்வாணமாக வந்து பாடம் எடுத்தது, மாணவிகளிடம் அசிங்கமாக பேசியது என்று ராஜகோபாலன் மீது பல்வேறு மாணவிகள் புகார் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை
பின்னர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தியதால் ராஜகோபாலனை ஜூன் 4-,ம் தேதிவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் ராஜகோபாலனை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோரி மனுவை ஏற்ற நீதிமன்றம் மூன்று நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கியது.

ஜாமீன் கோரி மனு
இதனையடுத்து போலீசார் ராஜகோபாலனை 3 நாள் காவலில் வைத்து இரவு, பகலாக துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராஜகோபாலன் சார்பில் தாக்கல் செய்த மனு போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக் முன்ப இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 'விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. எனவே ஜாமீன் வழங்க கூடாது' என எதிர்ப்பு தெரிவிக்கபட்டது.

நீதிபதி மறுப்பு
ராஜகோபால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது .ஏற்கனவே காவல்துறை தங்களின் காவலில் எடுத்து விசாரித்து விட்டனர். ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளோம்' என்று தெரிவிக்கபட்டது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. எனவே தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது' என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications