பீதியில் வெளிமாநிலத்தவர்.. பயமா? உடனே இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம்.. அறிவித்த காவல்துறை!
வெளிமாநில தொழிலாளர்களுக்காக தமிழ்நாடு காவல்துறை உதவி எண்களை வெளியிட்டுள்ளது.
சென்னை : பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதை போலவும், அவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை எனவும் சில வீடியோக்கள் சமூகவலைதளத்தில் அவதூறாக பரப்பப்பட்டு வருகிறது. இது வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது.
பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது போல் உணரும் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவின. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் சொந்த ஊர் செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் குவிந்தனர். அவர்கள் ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதாக தெரிவித்திருந்த நிலையில் போலீசார், இலவச தொலைபேசி எண்களை அறிவித்துள்ளனர்.
பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது போல் உணரும் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிட்டு, 0421-22-3313, 9498101300, 9498101320 ஆகிய எண்களை அறிவித்துள்ளனர். உதவி தேவைப்படும் வெளிமாநில தொழிலாளர்கள் இந்த ஹெல்ப்லைன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications