அனுமதியின்றி சர்கார் பேனர் வைத்ததாக நடவடிக்கை.. 54 விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு!
தமிழகம் முழுக்க அனுமதியின்றி சர்கார் பேனர் வைத்ததாக 54 விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகம் முழுக்க அனுமதியின்றி சர்கார் பேனர் வைத்ததாக 54 விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்தியா முழுக்க தற்போது சர்கார் படம் வைரல் ஆகியுள்ளது. அதிமுகவினரின் எதிர்ப்பு காரணமாக படம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
தீபாவளியன்று விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியானது. இந்த படத்தில் நிறைய அரசியல் தொடர்பான காட்சிகள் உள்ளது.

நீக்க சொன்னார்கள்
இந்த காட்சிகள் அதிமுகவினரை கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் சர்கார் படத்திற்கு அதிமுக போராடி வருகிறது. இந்தநிலையில், சென்னையில் உள்ள பல தியேட்டர்கள் முன் இருக்கும் சர்கார் பட பேனர்கள் கட்டாயப்படுத்தி அகற்றப்படுகிறது. சில தியேட்டர்களுக்கு கடும் போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

வழக்கு பதிவு
இந்த நிலையில் போலீஸ் இதில் இன்னொரு விதமான நடவடிக்கையும் எடுத்து வருகிறது. அதன்படி, முறைகேடாக அனுமதியின்றி பேனர் வைத்ததாக விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. முக்கியமான தியேட்டர்கள் முன் இருக்கும் பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி போலீஸ் வழக்கு பதிவு செய்து வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எத்தனை பேர்
சர்கார் பேனர் தொடர்பாக இதுவரை விஜய் ரசிகர்கள் 56 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி பேனர் வைத்ததாக தஞ்சாவூரில் 25 விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் 21 விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் 10 விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரும் கொந்தளிப்பு
இந்த விவகாரம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வேண்டுமென்றே பழிவாங்கும் விதமாக விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது என்று ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மேலும் சர்கார் பேனர்களை கிழித்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
-
முதல்வர் விஜய்யை சுற்றி தலைமை செயலகத்தில் 4 பவர் சென்டர்கள்.. முன்னாள் அமைச்சர் உதயக்குமார் புகார் -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள் -
தொகுதி தோறும் 2 கேமராமேன், ஒரு எடிட்டர்! தவெக எம்எல்ஏ-க்களுக்கு கட்சி தலைமை போட்ட 'இன்ஸ்டா' உத்தரவு! -
விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம்












Click it and Unblock the Notifications