நீண்ட போராட்டத்திற்கு பிறகு.. நவம்பர் 6 இல் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த தமிழக காவல் துறை அனுமதி
சென்னை: நவம்பர் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நடத்திக் கொள்ள காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2 ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர் எஸ் எஸ் அமைப்பு காவல் துறை அனுமதி கோரியது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் அதாவது ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்ட சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியா முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு சொந்தமான அலுவலகங்களிலும் நிர்வாகிகளின் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இதனால் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவியது.

ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு
இந்த நேரத்தில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் காவல் துறை அனுமதி மறுத்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை ஆர் எஸ் எஸ் அமைப்பு நாடியது. இது தொடர்பான மனுவில் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என 9 பேர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

நீதிமன்றம் அனுமதி
இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்எஸ் எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார். ஆனால் சட்டம் ஒழுங்கு காரணமாக போலீஸார் அனுமதி அளிக்க மறுத்தனர்.

6 ஆம் தேதி ஆர் எஸ் எஸ் ஊர்வலம்
இது தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் வரும் நவம்பர் 6 ஆம் தேதி ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு தமிழக காவல் துறை அனுமதி அளித்துள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அனுமதி வழங்கிக் கொள்ளலாம் என டிஜிபி சைலேந்திர பாபு காவல் துறை நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

விசிக எதிர்ப்பு
இதே போல் அக்.2 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவித்த ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த அமைப்பின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என மற்ற மாநிலத்தில் நடந்த அசம்பாவிதங்களை சுட்டிக் காட்டி மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications