விருது தரும் ஆளுநர் ரவி.. யாருக்கு தகுதி? பரிந்துரைக்கவும் தகுதி நிர்ணயம் - ரூ.5 லட்சம் பரிசு வேற

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான 2023 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுக்கான பரிந்துரைகளை அனுப்பக்கோரியுள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, அதற்கான தகுதியையும் நிர்ணயித்துள்ளது.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, 2023 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதை அறிவிக்கவுள்ளது. "சமூக சேவை" மற்றும் "சுற்றுச்சூழல் பாதுகாப்பு" என இரண்டு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படும். தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் சமூகத்துக்கு ஆற்றி வரும் சிறப்பான சேவைகளை முறையாக அங்கீகரித்து, ஊக்குவித்து பாராட்டும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படும்.

TN Rajbhavan announce recommendation for Governor award

மேலும், விருதுக்கு தேர்வானவர்களுக்கு குடியரசு தினத்தன்று (ஜனவரி 26, 2024) மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநரால், ஆளுநர் மாளிகையில் நேரில் பாராட்டுச் சான்று மற்றும் ரொக்க பரிசு வழங்கப்படும். விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் ஜூன் 05 2023 முதல் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை பெற கடைசி நாள் ஜூலை 31 2023, மாலை 5.00 மணி ஆகும்.

ஒவ்வொரு பிரிவிலும் நான்கு வெற்றியாளர்கள் (ஒரு நிறுவனம் மற்றும் மூன்று தனி நபர்கள்) தேர்வு செய்யப்படுவார்கள். நிறுவனத்திற்கான விருதுடன் ரூபாய் ஐந்து லட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தனி நபருக்கான விருதுடன் ரூபாய் இரண்டு லட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

தனிநபர்கள், அரசு சாரா நிறுவனங்கள் நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் பரிந்துரைக்கப்படலாம். அல்லது விண்ணப்பதாரரும், பரிந்துரைக்கப்பட்டவரும் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு இடைவிடாமல் தமிழ்நாடு மாநிலத்தில் அந்தந்த துறைகளில் சேவை ஆற்றியிருக்க வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் அல்லது நிறுவனமும் ஒரு பிரிவில் மட்டுமே விண்ணப்பிக்க அல்லது பரிந்துரைக்கப்படுவதற்கு தகுதி பெறுவர்.

பரிந்துரைக்கும் நபர்களின் தகுதி:

i) தமிழ்நாடு அரசு செயலாளர் அல்லது அதற்கு மேல் உள்ள அதிகாரி (தற்போது பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்றவர்).

ii) இந்திய அரசு இணை செயலாளர் அல்லது அதற்கு மேல் உள்ள நிலையிலான இந்திய அரசு அதிகாரி (தற்போது பணியில் உள்ள அல்லது ஒய்வு பெற்றவர்).

iii) மாநில பல்கலைக்கழக துணை வேந்தர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள்.

iv) பத்ம விருது பெற்றவர்கள்

v) தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள்

விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் சரிபார்ப்புக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு இதற்காகவே நியமிக்கப்பட்ட நன்மதிப்பு வாய்ந்தோர் இடம்பெற்ற தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்படும். ஒரே தனிநபர் அல்லது நிறுவனத்தின் பெயரை இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பித்தாலோ பரிந்துரைத்தாலோ அது நிராகரிக்கப்படும். தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை அனுப்ப வேண்டிய முகவரி: ஆளுநரின் துணைச் செயலாளர் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர், ஆளுநர் செயலகம், ஆளுநர் மாளிகை, கிண்டி, சென்னை - 600022

விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் ஆளுநர் மாளிகை இணையதளத்தில் (www.tnrajbhavan.gov.in) இடம்பெற்ற உரிய படிவத்தை பூர்த்தி செய்து, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பி வைக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+