ஒரு நொடிக்கு ஒரு லட்சம் .. கோடிகளில் பதிவுத்துறை.. நேற்று தமிழக அரசுக்கு வரலாற்றில் இல்லாத வருமானம்
சென்னை: 2024-25 ம் நிதியாண்டில் கடந்த 10.2.2025 அன்று ஒரே நாளில் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதுவரையில் இல்லாத அளவில் தமிழக அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் கிடைத்திருந்தது.ஆனால் 2025-26-ம் நிதியாண்டில் இதற்கும் அதிகமாக நேற்று ஒரே நாளில் 27,440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.272.87 கோடி வருவாய் வந்துள்ளது. அட்சய திரிதியை நாளில் பத்திரப்பதிவு துறையின் சாதனை குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
அட்சய திரிதியை நாளான நேற்று தமிழக பதிவுத்துறையில் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 57 பத்திரங்கள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 57 லட்சம் என்கிற அளவில் வருமானம் அரசுக்கு நேற்று கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட ஓய்வு நேரத்தை எல்லாம் கழித்து பார்த்தால் ஒரு நொடிக்கு ஒரு லட்சம் என்கிற அளவில் வருமானம் வந்துள்ளது.

பொதுவாக மங்களகரமான நாளில் பத்திரப்பதிவுகள் அதிகமாக நடக்கும். அப்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன் விநியோகிக்கப்படும். முக்கியமான நாளில் 50 முதல் 100 டோக்கன்கள் கூடுதலாக விநியோகிக்கப்படும். அந்த வகையில் நேற்று அட்சய திருதியை நாளில் ஏராளமானோர் பத்திரப்பதிவு செய்தனர். இதனால் அரசுக்கு ஒரே நாளில் 273 கோடி என்கிற அளவில் வருவாய் கிடைத்துள்ளது.
தமிழக பத்திரப்பதிவுத் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "மங்களகரமான நாளான நேற்று (ஏப். 30-ந் தேதி) அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.
பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று நேற்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும். 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் .
12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டது.2024-25 ம் நிதியாண்டில் கடந்த 10.2.2025 அன்று ஒரே நாளில் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.
2025-26-ம் நிதியாண்டில் இதற்கும் அதிகமாக நேற்று ஒரே நாளில் 27,440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.272.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.இதன்மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் இதுவரை இல்லாத அளவில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது என வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications