சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் மேலும் 5,015 பேருக்கு கொரோனா; 5,005 பேர் டிஸ்சார்ஜ்; 65 பேர் மரணம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று மேலும் 5,015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அத்துடன் 5,005 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவால் ஞாயிறு மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவுக்கு அடுத்ததாக 4-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் ஞாயிறன்று 5015 பேருக்கு கொரோனா உறுதியானது.

10 பைசா பிரியாணிக்காக.. அதிகாலை 4 மணிக்கே நின்ற கூட்டம்.. காற்றில் பறந்த கொரோனா விதிகள் 10 பைசா பிரியாணிக்காக.. அதிகாலை 4 மணிக்கே நின்ற கூட்டம்.. காற்றில் பறந்த கொரோனா விதிகள்

6.56 லட்சம் பேருக்கு பாதிப்பு

6.56 லட்சம் பேருக்கு பாதிப்பு

இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,56,385 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,252 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

5,005 பேர் டிஸ்சார்ஜ்

5,005 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 5,005 பேர் இன்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிக்கை 6,02,038 ஆகும்.

குறையும் ஆக்டிவ் கேஸ்கள்

குறையும் ஆக்டிவ் கேஸ்கள்

தமிழகத்தில் மொத்தம் 44,095 பேர்தான் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை (ஆக்டிவ் கேஸ்கள்) பெற்று வருகின்றனர். மாவட்டங்களில் சென்னையில் இன்று 1,250 பேருக்கு ஞாயிற்றுக்கிழமையன்று கொரோனா பாதிப்பு உறுதியானது.

மாவட்டங்களில்..

மாவட்டங்களில்..

கோவையில் 389 பேருக்கும் சேலத்தில் 294 பேருக்கும் கொரோனா உறுதியானது. மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 19 பேர் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கோவையில் 4 பேரும் செங்கல்பட்டில் 2 பேரும் கொரோனாவால் மாண்டுபோயினர்.

English summary
Tamilnadu reported 5015 new Coronavirus cases in the last 24 hours, taking total cases to 6,56,385
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X