அரசு பள்ளிகளில் ஜரூர் மாணவர் சேர்க்கை- சொந்த செலவில் இலவச செல்போன் தருவதாக அறிவித்த தலைமை ஆசிரியர்
சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் ஶ்ரீவில்லிப்புத்தூரில் சொந்த செலவில் இலவச செல்போன் தருவதாக அறிவித்திருக்கிறார் தலைமை ஆசிரியர். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
கொரோனா பரவல் அச்சத்தால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பாடங்களை தமிழக அரசு இணையம் மற்றும் தொலைக்காட்சி மூலம் நடத்தி வருகிறது.

இதனைத் தொடர்ந்து நேற்று முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் ஶ்ரீவில்லிப்புத்தூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தங்களது பள்ளியில் மாணவர்கள் சேர்ந்தால் இலவசமாக செல்போன் வழங்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு.
இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இது குறித்து பெற்றோர் கூறுகையில், தமிழக அரசு, அரசாங்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்பில் உள் இட ஒதுக்கீடு செய்துள்ளது. எங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவில் அனைத்து வசதிகளும் உள்ளது.

சிறப்பாக பாடம் கற்றுத் தரப்படுகிறது. மேலும் தற்போதுள்ள கொரோனா அச்சம் சூழ்நிலையில், இணையதளம் வாயிலாக பாடம் கற்றுத் தரப்படுகிறது. மொபைல்போன் வாங்க இயலாத நிலையில், தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் மொபைல்போன் வாங்கித் தந்துள்ளார் என்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications