தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு எப்போது? பள்ளி கல்வித்துறை சூப்பர் முடிவு
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளி இறுதித்தேர்வை ஏப்ரல் 13-ந் தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை லோக்சபா தேர்தல் வரும். 2019ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் தேர்தல் வந்துள்ளது. இந்த தேர்தலில் வெல்லும் கூட்டணியே அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்தியாவை ஆளப்போகிறது.

இந்நிலையில் லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் ஏப்ரல் 18ம் தேதி நடந்த நிலையில், இந்த முறையும் அதேபோன்று நடப்பதால், பள்ளி இறுதி தேர்வை முன்கூட்டியே முடிக்க வேண்டிய கட்டாயத்தில் பள்ளிகள் இருக்கின்றன.
வழக்கமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் பள்ளி இறுதி தேர்வு நடைபெறுவது வழக்கம். தற்போது பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிளஸ்-2 மாணவர்களுக்கு வருகிற மார்ச் 22-ந் தேதியுடனும், பிளஸ்-1 மாணவர்களுக்கு வருகிற மார்ச் 25-ந் தேதியுடனும் தேர்வு நிறைவு பெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் முன்கூட்டியே தேர்வை நடத்திய முடிக்க வேண்டிய கட்டாயத்தில பள்ளிகள் உள்ளன.
ஏனெனில் வழக்கமாக லோக்சபா தேர்தல் பணிகளில் அரசு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் ஈடுபடுவது வழக்கம். அவர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சியினை தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் தேர்தல் ஆணையம் வழங்கும்..
எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வை தேர்தல் தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருக்கிறதாம்.. அதன்படி ஏப்ரல் 13-ந் தேதிக்குள் ஆண்டு இறுதித்தேர்வை நடத்தி முடிப்பதற்கான ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளதாம்.. 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளி இறுதித்தேர்வுகள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications