Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”தந்தை சொன்ன ஒரு வார்த்தை” சாதித்து காட்டிய தூத்துக்குடி விவசாயி மகன்.. ஐஏஎஸ் தேர்வில் அசத்தல்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். வீட்டில் இருந்தே படித்து இந்த தேர்வில் வெற்றி பெற்றதாகவும், வேலை கிடைத்ததும், தனது ஊருக்கு பெருமை சேர்க்கும் வகையில் நேர்மையுடன் மக்களுக்கு சேவை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரிய பணிகளுக்காக யுபிஎஸ்சியால் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளார். சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து மிகப்பெரிய உயரத்தை கல்வியால் எட்டியிருக்கும் அந்த மாணவர் குறித்த விவரம் வருமாறு:-

tn-student-from-a-farming-family-near-sathankulam-cleared-in-the-upsc-exam

தூத்துக்குடியில் உள்ள பனைக்குளம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள கருங்கடல் அருகே மேல பனைக்குளம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கத்துரை. இவரது மனைவி விஜயா. இந்த தம்பதியினரின் மகன் பெலிக்ஸ் காபிரியேல் மார்க் (வயது 27). சிறு வயதில் இருந்தே சிறப்பாக படித்து வந்த காபிரியேல் மார்க், சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் பிரிவில் ஆட்டோ மொபைல் படித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு படித்த காபிரியேலுக்கு எதிர்பார்த்த பணி கிடைக்காமல் குறைந்த சம்பளம் உள்ள பணி கிடைக்க வாய்ப்பு வந்துள்ளது. இதனால் விருப்பம் இல்லாமல் இருந்து வந்த காபிரியேலை, அவரது தந்தை தங்கத்துரை ஐஏஎஸ் தேர்வு எழுத வலியுறுத்தினார். முதலில் ஐஏஎஸ் தேர்வு ரொம்ப கஷ்டமாக இருக்கும் என நினைத்த காபிரியேல், பிறகு தந்தை விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக ஐஏஎஸ் தேர்வு எழுதி தொடங்கினார்.

6 வது முயற்சியில் வெற்றி

முதல் மூன்று முறை எழுதிய தேர்வில் அவர் தேர்வு ஆகவில்லை. அதன்பின் தொடர்ந்து எழுதியதில் இரண்டு முறை நேர்காணல் வரை சென்று வந்துள்ளார். இருந்தாலும் விடா முயற்சியுடன் 6-வது முறையாக இந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வு எழுதிய காபிரியேல், 783 வது இடம் பெற்று தேர்வு பெற்றுள்ளார். நேர்காணல் முடிந்த நிலையில் பணி ஒதுக்கீடுக்காக காத்திருக்கிறார் காபிரியேல்.

கல்வி என்னும் ஆயுதத்தால் எந்த நிலையில் இருந்தாலும் மிகப்பெரிய உயரத்தை எட்ட முடியும் என்பதை தனது அசாத்திய உழைப்பால் சாதித்து இருக்கிறார் மாணவர் காபிரியேல். இது குறித்து காபிரியேல் கூறியதாவது:- "எனது தந்தை தங்கதுரை விவசாயியாகவும், தாய் வீட்டிலும் இருந்து வருகிறார். சாத்தான்குளத்தில் உள்ள ஹென்றி மெட்ரிக் மேல்நிலையில் 1 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தேன். அப்போது மாவட்ட அளவில் நான் முதல் மதிப்பெண் பெற்றேன்.

வீட்டில் இருந்தே படித்தேன்

கல்லூரி படிப்பை சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் படித்தேன். அண்ணா பல்கலைக்கழகத்தில், பொறியியல் ஆட்டோ மொபைல் பிரிவு எடுத்து படித்தேன். எனது தந்தை தங்கதுரை, விருப்பபடி ஐஏஎஸ் தேர்வு எழுத தொடங்கினேன். வீட்டில் இருந்தே படித்து ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வந்தேன். எனது படிப்புக்கு பெற்றோர் முதல் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். முதல் மூன்று முறை தேர்ச்சி பெறவில்லை.

அதன்பிறகு தொடர்ந்து எழுதியதில் 2 முறை நேர்காணல் வரை சென்று வந்தேன்.. ஆனால், பணியிடத்துக்கு தேர்வாகவில்லை. தற்போது எழுதிய தேர்வில் வெற்றி அடைந்துள்ளேன். எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் எனக்கு வாய்ப்பு அளித்த கடவுளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த எனது பெற்றோர், எனது தந்தையின் நண்பர்கள் மற்றும் உறவினர், எனது நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

சிவில் சர்வீஸ் தேர்வு

சிறிய கிராமமான மேல பனைக்குளத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ளது எனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது. என்னை போலவே கிராம பகுதியில் இருந்து பலர் இந்த தேர்வு எழுதி வெற்றி பெற்று பணிக்கு வர வேண்டும் என்பதே எனது விருப்பம். எனக்கு எந்த பணி ஒதுக்கினாலும் நேர்மையுடன் பணியாற்றி மக்களுக்கு சேவை செய்வேன்" என்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு ஊர் கிராம மக்கள் ஒன்று கூடி பாராட்டு தெரிவித்தனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு உள்பட சிவில் சர்வீசஸ் பதவிகளில் வரும் காலி இடங்களுக்கு தகுதியானவர்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் இந்த பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

2, 845 பேர் தேர்ச்சி

2024- ஆம் ஆண்டுக்கான அறிவிப்பாணையை யுபிஎஸ்சி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி வெளியிட்டது. மொத்தம் 1,056 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு பல ஆயிரம் பேர் விண்ணப்பித்த நிலையில், அவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவு ஜூலை 1 ல் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 14 ஆயிரத்து 627 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி வெளியானது. இதில் 2 ஆயிரத்து 845 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

முதலிடம் யார் தெரியுமா?

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த ஜனவரி 17 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 17 வரை வரை நடைபெற்றது. இதன்படி, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறப்பட்ட மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் சிவில் சர்வீசஸ் பதவிகளுக்காக 1009 பேர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதற்கான பட்டியல் www.upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருந்தது.

இதில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவி சக்தி துபே முதலிடத்தை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 பேர் இடம்பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது. தர்மபுரியை சேர்ந்த பி.சிவச்சந்திரன் மாநிலத்தில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 23-வது இடத்தையும் பெற்றிருக்கிறார். ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் ராதாகிருஷ்ணன் தேர்வில் 80-வது இடம் பெற்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+