டோல்கேட் கட்டணம் உயர்வு.. தமிழக வாகன ஓட்டிகளுக்கு ஏப்.1 முதல் ட்விஸ்ட்! 60 சுங்கச்சாவடிகளின் லிஸ்ட்
சென்னை: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு பேரிடியாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.. வரும் April 1 முதல் மாநிலம் முழுவதும் உள்ள 60 முக்கிய சுங்கச்சாவடிகளில், அதாவது Toll Plaza-களில் கட்டணத்தை (Price Hike) உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.. அப்படியானால் தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய சாலைகளில் பயணிக்க இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.. இது தொடர்பான முழுமையான சுங்கச்சாவடி லிஸ்ட்தான் தற்போது வெளியாகியுள்ளது.. அதைப்பற்றி இங்கே நாம் சுருக்கமாக பார்ப்போம்.
ஒவ்வொரு வருஷமும் பராமரிப்பு மற்றும் பணவீக்கத்தை கணக்கில் கொண்டு சுங்க கட்டணத்தை மாற்றியமைக்க நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.. அந்த வகையில், இந்த வருடமும் கட்டண உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ லிஸ்ட்டை ஆணையம் வெளியிட்டுள்ளது. இதை பார்த்து வாகன ஓட்டிகள் அரண்டு போய் கிடக்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 6,600 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் விரிந்து கிடக்கின்றன.. நம்முடைய பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவை இணைக்கும் முக்கிய பாதைகளாகவும் இவை விளங்குகின்றன..
வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பு
இந்த சாலைகளில் தினசரி ஆயிரக்கணக்கான லாரிகள், அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், கார்கள் என லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகிறார்கள்.. இப்போது தமிழகத்தில் மொத்தம் 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.. கடந்த 2024-25 நிதியாண்டில் மட்டும் இந்த செக்போஸ்ட் மூலமாக சுமார் 4300 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாம்.
இந்த புதிய அறிவிப்பின்படி, வாகனங்களின் வகையை பொறுத்து 10 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் சுங்கச்சாவடி தான் தமிழகத்திலேயே அதிக வசூல் தரும் இடமாக உள்ளது.. அங்கு மட்டும் ஆண்டுக்கு 275 கோடி ரூபாய் வசூலாகிறது.
ஏப்ரல் 1 நள்ளிரவு முதல் அமல்
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலையேற்றம் காரணமாக, லாரி மற்றும் பேருந்து போன்ற சரக்கு வாகனங்களின் வாடகை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. இது மறைமுகமாக காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்..
சுங்கச்சாவடி ஒப்பந்தங்களின்படி வருடத்துக்கு 5 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி உண்டு என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள் இனி கூடுதல் சுமையை சுமக்க வேண்டியிருக்கும். இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 1-ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரப்போகிறது.
கட்டணம் உயரும் 60 சுங்கச்சாவடிகளின் பட்டியல் இதோ
மொரட்டாண்டி, பள்ளிகொண்டா, வாணியம்பாடி, கணியூர், கிருஷ்ணகிரி, பரனூர், ஆத்தூர், மாத்தூர், நல்லூர், சூரப்பட்டு, வானகரம், ஸ்ரீபெரும்புதூர், சென்னசமுத்திரம், எஸ்.வி.புரம், பட்டரைபெரும்புதூர், கல்லக்குடி, மணகெதி, கருங்குழி, நங்கிளி கொண்டான், கரியமங்கலம், நாகம்பட்டி, கரகத்தஹள்ளி, கொத்தட்டை, கெங்கராம்பாளையம், சேலியமேடு, கீழ்குப்பம், பொன்னலகரம், வல்லம், இனம்கரியாந்தல், தென்னமாதேவி, கதவணி, வேலம்பட்டி, மதுக்கரை, புதுப்பட்டி,
பொங்கலூர், வாழவந்தான்கோட்டை, கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைபுதூர், நாங்குநேரி, பூதக்குடி, சிட்டம்பட்டி, லெட்சுமணப்பட்டி, லெம்பாலக்குடி, கோடிகோட்டை, வெண்ணாத்தூர், பழைய கந்தர்வகோட்டை, செண்பகம்பேட்டை, திருபாச்சேத்தி, போகலூர், வாகைகுளம், திருப்பதிசாரம், உப்பார்பட்டி, சத்திரபட்டி, புதூர்பாண்டியபுரம், கோவில்வேணி, வேம்புகுடி, மாணம்பாடி, எலியார்பத்தி மற்றும் புதுார்..!!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications