தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு! பேச்சுவார்த்தையில் முடிவு
சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடைசியாக 14வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2023ம் ஆண்டு முடிவடைந்தது.

இதனையடுத்து 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நடந்தது. ஆனால் தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கையுடன் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், 3ம் கட்டமாக குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ஊழியர்களுக்கான திருமண கடன் ரூ.50,000லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான, 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையானது, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் இறுதி செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து எழுநூற்று என்பத்து ஏழு (1,09,787) பணியாளர்கள் 15-வது ஊதிய ஒப்பந்தத்தின் கீழ் 48,006 ஓட்டுநர்களும், 42,825 நடத்துநர்களும், 13,003 தொழில்நுட்பப் பணியாளர்களும் மற்றும் 2,529 இதரப் பிரிவு பணியாளர்களும் பலனடைவார்கள்.
01.09.2023 முதல் அடிப்படை ஊதியத்தில் 6% உயர்த்தி ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு, நிலுவைத் தொகை 01.09.2024 முதல் 4 காலாண்டு தவணையாக வழங்கப்படும்.
திருமண கடன் ரூ.50,000/- லிருந்து ரூ.1,00,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும். பண்டிகை முன்பணம் ரூ.10,000/- லிருந்து ரூ.20,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும். ஊக்கத்தொகை (இன்சென்டிவ்) அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஒரே முறையில் கணக்கீடு செய்து தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக பணியாளர்களுக்கு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல குறைந்தபட்சத் தொகையாக நாளொன்றுக்கு ரூ.6/- லிருந்து ரூ.20/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.
தொழிலாளர்கள் அவர்களது பணிக்காலத்தில் வழங்கப்பட்ட தண்டனை குறித்த மேல்முறையீடு 90 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும் என்பதை ஒரு முறை தளர்த்தி 30.06.2025 க்குள் மேல்முறையீடு செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப பரிசீலித்து, ஆணைகள் வழங்கப்படும் நாளிலிருந்து உரிய பலன்கள் வழங்கப்படும் உள்ளிட்ட தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இறுதி செய்தோம்.
இக்கூட்டத்தில், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி,தொழிலாளர் தனி இணை ஆணையர் இல.ரமேஷ், நிதித்துறை அரசு சிறப்புச் செயலாளர் அருண்சுந்தர் தயாளன், போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் செயலாளர் எஸ்.கார்மேகம், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர் செயலர் /கூட்டுநர் டாக்டர்.த.பிரபுசங்கர், நிர்வாகத்தரப்பு குழு. துணைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பேரவை /தொழிற்சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications