தமிழகத்தின் சில பகுதிகளில் இடியுடன் 5 நாட்களுக்கு மழை.. பல இடங்களில் வெயில் வறுக்கும்- வானிலை மையம்
சென்னை: வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு, சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கடுமையான வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெயில் உயர்ந்து காணப்படுவதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு மகிழ்ச்சித் தகவலை தெரிவித்து உள்ளது.

தென் மாவட்டங்கள்
அதன்படி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறண்ட வானிலை
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும், சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப நிலை
விருதுநகர், மதுரை போன்ற தெற்கு உள் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு அதிக பட்ச வெப்பநிலை 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் 1.5 கிலோமீட்டர் உயரம் வரை இந்த வளிமண்டல சுழற்சி நிலவுகிறதாம். இதனால்தான் அங்கு மழையும் பிற பகுதிகளில் நல்ல வெயிலும் என கலந்துகட்டி தமிழகத்தில் அடிக்கப்போவதாக கூறுகிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications