புதிய புயல் சின்னம்.. தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?.. வெதர்மேன் சொன்ன ஸ்வீட் நியூஸ்!
சென்னை: வங்கக் கடலில் உருவாக இருக்கும் புதிய புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்தது.
இதனால் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி ஊருக்குள் வழிந்தோடுகின்றன. இந்த மழையால் திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட இடங்களில் வெள்ளக்காடாக மாறியது.

மேற்கு மாம்பலம்
சென்னையில் திநகர், மேற்கு மாம்பலம், அசோக் நகர், செங்குன்றம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, ஊரப்பாக்கம், கோவிலம்பாக்கம், கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம், பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் கழுத்தளவு முதல் முழங்கால் வரை தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இரவு வரை மழை
கடந்த நவம்பர் 7ஆம் தேதி தொடங்கிய இந்த மழை நேற்று இரவு வரை நீடித்திருந்தது. தற்போது வெயில் காய்ந்து வருகிறது. இனி மழை நீர் படிப்படியாக வடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகிறதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
Recommended Video

புயலாக மாறினால்
இது மேலும் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது புயலாக மாறினால் ஜாவத் என சவுதி அரேபியா பரிந்துரைத்த பெயர் சூட்டப்படும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் இந்த புதிய புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பாதிப்பு ஏற்படுமோ என மக்கள் அஞ்சினர்.

வெதர்மேன் அப்டேட்
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் புதிய புயல் சின்னம் தமிழகத்திற்கானது அல்ல. அது வேறு பகுதிக்கு செல்கிறது என தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். அது போல் தமிழகத்திற்கு சிறிய பிரேக் கிடைக்கும் என்றும் மழை அங்கொன்றும் இங்கொன்றுமாக பெய்யும். அப்படியே பெய்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார். இந்த புயல் தெற்கு ஆந்திரா அல்லது ஒடிஸா பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications