Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்.. கர்நாடகாவின் முயற்சி முறியடிக்கப்படும்.. துரைமுருகன் திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சி முறியடிக்கப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத்தைச் சந்தித்து மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

 TN will not allow construction of dam in Meghadatu, Karnataka attempt will be thwarted: Duraimurugan

மேலும் இதுகுறித்து அவர் நீர்வளத்துறை அமைச்சரிடம் கடிதம் அளித்துள்ளார். அந்த கடிதத்தில், கர்நாடக அரசின் நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், நதிநீர்ப் பங்கீடு பிரச்சினைக்கு புதிதாக ஒரு தீர்ப்பாயத்தை ஏற்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருபோதும் தமிழகம் அனுமதிக்காது: மேகாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இந்த நிலையில், இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கப்பெற வேண்டிய காவிரி நீரை பெறுவதற்கு தேவையான முயற்சிகளை அனைத்து மட்டங்களிலும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வளத்துறை, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவருக்கு, கடந்த 3-ந்தேதி எழுதிய கடிதத்தில், குறைபாட்டை நிவர்த்திக்கவும், ஜூலை மாதத்தில் அட்டவணைப்படி கர்நாடகா நீர் அளிக்க அறிவுறுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இவ்வாறு தமிழக அரசு, விவசாயிகளின் பாசனத்திற்கேற்ப நீர் அளிக்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

கர்நாடக அரசு அவ்வப்போது மேகதாது பிரச்சினையை எழுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளது. இது அரசியல் நிர்பந்தத்தினாலோ என்னவோ தெரியவில்லை. எவ்வாறு இருப்பினும் தமிழ்நாடு அரசு மேகதாது அணை கட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்காது. கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பதவி ஏற்றவுடன் மேகதாது அணை கட்டுவது குறித்து பேசிய செய்திக்கு உடனேயே நான் மறுப்புத் தெரிவித்திருந்தேன்.

பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை: அண்மையில் டிகே சிவக்குமார் மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்தபோது, மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி குறித்து பேசியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இது வருந்தத்தக்கது. கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது. இத்திட்டம் குறித்து, எற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமரை நேரில் சந்தித்தபோது மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளார்.

நானும், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கும்போதெல்லாம் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளேன். மத்திய நீர்வளத்துறை அமைச்சரும், தமிழ்நாட்டின் இசைவில்லாமல் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தமிழ்நாடு அரசு இந்த பிரச்சினை குறித்து தொடர்ந்துள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

வலுவான வாதங்களை தமிழகம் முன்வைக்கும்: தவிர, மேகதாது அணை திட்டம் குறித்த பொருள் பற்றி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்திய போதெல்லாம் தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, ஆணையத்தின் கூட்டங்களில் இப்பொருள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இத்திட்டம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது, வலுவான வாதங்களை முன் வைத்து கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு முறியடிக்கும்.

இவ்வாறு தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும், காவிரி விவசாயிகளின் நலன் கருதியும், இவ்வாண்டு விவசாயத்திற்கு தடையின்றி நீர் வழங்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும். மேகதாது அணை பிரச்சினை குறித்தும் தக்க நடவடிக்கைகளை இவ்வரசு எடுக்கும் என்பது உறுதி. இப்பிரச்சினையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+