சென்னை தி நகர் துரைசாமி சுரங்கபாதை உள்பட 3 சுரங்கபாதைகள் மூடல்!
சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள துரைசாமி சுரங்கபாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சுற்று வட்டார பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல், வேளச்சேரி, அடையாறு, மந்தைவெளி, வடபழனி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலை உள்ளது. எனினும் வார நாட்களில் விடுமுறை எடுக்கும் நடைமுறை கொண்ட அலுவலக பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமையிலும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

உணவு வாங்க
இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில் உணவு வாங்கக் கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முக்கிய சாலைகளில் மழை நீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஒரு நாள் மழைக்கே இப்படி என்றால் இன்று 3 மணி நேரத்திற்கு சென்னையில் மழை என சொல்லியுள்ளதை எண்ணி மக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.

தண்ணீர் தேக்கம்
சுரங்கபாதைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு அவை மூடப்பட்டுள்ளன. திநகரில் உள்ள துரைசாமி சுரங்கபாதை, வடசென்னையில் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கபாதை, சேத்துப்பட்டு- பூந்தமல்லியை இணைக்கும் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளன.

ஊழியர்கள் முயற்சி
இங்கிருந்து தண்ணீரை வெளியேற்றும் முயற்சிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். திநகர் சுரங்கபாதையானது மேற்கு மாம்பலத்திலிருந்து திநகர் செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் முக்கிய சுரங்கபாதைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் போக்குவரத்து குறைந்துள்ளது. எனினும் பேருந்து போக்குவரத்து, இரு, நான்கு சக்கர வாகனங்கள் இயக்க முடியாத நிலை உள்ளது.












Click it and Unblock the Notifications