டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு.. விடியல் பயணம் உள்பட தமிழக அரசின் திட்டம் குறித்த கேள்விகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நேற்று நடந்தது. மொத்தம் 13 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், 2 லட்சம் பேர் வரை ஆப்செண்ட் ஆனதாக தகவல் வெளியானது. வினாத்தாளும் கொஞ்சம் கடினமானதாக இருந்ததாகவும் தேர்வர்கள் மத்தியில் பேசப்படும் நிலையில், டிஎன்பிஎஸ்சி தமிழக அரசின் திட்டம் தொடர்பான கேள்விகளும் இடம் பெற்று இருந்தன.

அதாவது, தமிழ்நாட்டில் விடியல் பயண திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?, மகளிர் உரிமைத்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததால் எளிமையாக இருந்ததாகவும் ஒருசிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

tnbc-group-4-exam-questions-on-tamil-nadu-governments-plans-including-the-vidiyal-payanam

குரூப் 4 தேர்வு

விஏஓ உள்பட பல்வேறு பதவிகளுக்கு என மொத்தம் 3,395 காலிப் பணியிங்களுக்கு நேற்று குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வுக்கு மொத்தம் 13 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வு மிகவும் கடினமானதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பொது அறிவு, தமிழ் போன்றவற்றில் மிகவும் நுட்பமான கேள்விகள் இடம் பெற்று இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்து இருந்தனர்.

விடியல் பயணம் எப்போது தொடங்கப்பட்டது?

டிஎன்பிஎஸ்சி தமிழக அரசின் திட்டம் தொடர்பான கேள்விகளும் இடம் பெற்று இருந்தன. அதாவது, தமிழ்நாட்டில் விடியல் பயண திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

A, மே. 2021, B, டிசம்பர் 2021
C. மார்ச் 2022, D. அக்டோபர் 2021
E. விடை தெரியவில்லை.

எளிமையாக இருந்தது

என்ற ஆப்ஷனுடன் கேள்விகள் இடம் பெற்று இருந்தது. இதேபோல, மகளிர் உரிமைத்தொகை தொடர்பான கேள்விகளும் இடம் பெற்று இருந்தன. இதுபோன்ற கேள்விகளுக்கு எளிமையாக பதிலளிக்க முடிந்தததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர். குரூப் 4 தேர்வுகளில் தமிழக அரசின் திட்டங்களை பற்றிய கேள்விகள் இடம் பெற்று இருப்பது, திமுக அரசை விளம்பரப்படுத்தும் வகையில் அமைந்து இருப்பதாக விமர்சனங்ளும் எழுந்தன.

ஒரு சிலர் தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும், அரசின் திட்டங்கள் குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கேட்கப்படுவது வழக்கமான ஒன்றுதான் எனவும் இதை பேசுபொருளாக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் சில கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகை கேள்வி

இதேபோன்று இதுதவிர, தமிழ்நாடு அரசின் கனவு இல்லத் திட்டம் பற்றிய கேள்வி, மகளிர் உரிமைத் தொகை திட்டம் பற்றிய கேள்விகளும் இடம்பெற்றிருந்தன. இல்லம் தேடி கல்வித் திட்டம், விடியல் பயணத் திட்டம், தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டம் சார்ந்த வினாக்கள், அகழ்வாராய்ச்சி குறித்து ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 3 வினாக்கள், இஸ்ரோ சார்ந்த ஒரு வினா, திராவிட மொழி சார்ந்த ஒரு வினா என பல கலவைகளை கொண்ட வினாத்தாளாக இது இருந்தது.

குரூப் 4 தேர்வு ரிசல்டும் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்து இருந்தார். ஆண்டு அட்டவணை படி சரியாக செயல்படுகிறோம் என்றும், குரூப்-2, 2ஏ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் அவர் கூறினார்.

காலிப்பணியிடங்கள் அதிகரிக்கும்

கடந்த ஆண்டு 9,497 காலிப் பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கான பதவிகள் இருந்தது. அது 2 ஆண்டுகள் சேர்ந்த காலி இடங்கள் ஆகும். ஆனால் இது ஓராண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்கள். தேர்வு முடிவு வெளியிடப்படும் வரை காலியிடங்களை சேர்த்துக் கொண்டே வருவோம். எனவே காலிப்பணியிடங்கள் அதிகரிக்கக் கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+