கூவிக்கூவி அழைத்தும் பாஜகவுக்கு வேட்பாளர்கள் கிடைக்கவில்லை! இதில் வியாக்கியானம் பேசுவதா? -காங்கிரஸ்
சென்னை: பாஜக இனி எந்தக் காலத்திலும் தனித்து போட்டியிட வேண்டும் என கனவில் கூட நினைக்காது என்று தமிழக காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.
தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவதைப்போல் நடிப்பவரை எழுப்ப முடியாது என்றும் வலிய வலிய, கூவிக்கூவி அழைத்தும் எவரும் பா.ஜ.க. சார்பாகப் போட்டியிட முன்வரவில்லை எனவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நகர்ப்புற உள்ளாட்சி
ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் பெற்ற வெற்றியைவிட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தமிழக வாக்காளர்கள் வழங்கியிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் மிக அமைதியாக நடந்து முடிந்த இத்தேர்தலில் படுதோல்வி அடைந்த அ.தி.மு.க.வினரும் பா.ஜ.க.வினரும் தேர்தல் முடிவுகளை ஏற்காமல் ஜனநாயகத்திற்கு விரோதமாக அவதூறு கருத்துகளைக் கூறிவருகிறார்கள். தேர்தல் தோல்வியைத் தாங்க முடியாத, காழ்ப்புணர்ச்சி கொண்ட இவர்களிடம் ஜனநாயக உணர்வை எதிர்பார்க்க முடியாது.

வியாக்கியானம்
நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சி பா.ஜ.க. தான் என்று அண்ணாமலை கூறிய கருத்துக்கு ஆணித்தரமான புள்ளி விவரங்களோடு தெளிவாகப் பதில் கூறியிருந்தோம். தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவதைப்போல் நடிப்பவரை எழுப்ப முடியாது. தற்போது, தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டியிட்டு. காங்கிரஸ் கட்சியைவிட அதிக வாக்குகளைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக பா.ஜ.க. விளங்குகிறது என்று புதிய வியாக்கியானம் பேசப்படுகிறது. இந்த வாதம் எந்த அடிப்படையில் கூறப்படுகிறது என்று தெரியவில்லை.

தமிழக பாஜக
ஆனால், தமிழக பா.ஜ.க. மொத்தம் உள்ள 12,838 வார்டுகளில் 5,594 வார்டுகளில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்த முடிந்தது. மற்ற தொகுதிகளில் நிதியுதவி வழங்கி வேட்பாளர்களை நிறுத்த வலிய வலிய, கூவிக்கூவி அழைத்தும் எவரும் பா.ஜ.க. சார்பாகப் போட்டியிட முன்வரவில்லை. ஆனால், போட்டியிட்ட இடங்களில் மொத்தம் பதிவான வாக்குகளில் 5.41 சதவிகிதம் மட்டுமே பெற்றிருக்கிறது. இதன்படி பார்த்தால் கூட, காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 12,838 வார்டுகளில், கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 1,370 வார்டுகளில் மட்டுமே போட்டியிட்டு 3.31 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

கூட்டணி ஒதுக்கீடு
ஆனால், கூட்டணி ஒதுக்கீட்டின்படி குறைவான எண்ணிக்கையில் போட்டியிடுகிற போது வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் கட்சியின் பலத்தை முடிவுசெய்ய முடியாது. ஆனால், மொத்தம் பதிவான வாக்குகளில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 49.99 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி மொத்தம் 592 வார்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் பா.ஜ.க. 5,594 வார்டுகளில் போட்டியிட்டு 308 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே 200 வார்டுகளைப் பெற்று இருக்கிறது. தமிழகம் முழுவதும் பெற்ற வார்டுகள் 108 தான்.

பாஜக டெபாசிட் காலி
எனவே, காங்கிரஸ் கட்சி குறைவான இடங்களில் போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் 16 வார்டுகளில் மட்டுமே போட்டியிட்டு 13 வார்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறது. மாறாக, பா.ஜ.க. 198 வார்டுகளில் போட்டியிட்டு ஓர் இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. 178 வார்டுகளில் பா.ஜ.க. டெபாசிட் தொகையைப் பறிகொடுத்திருக்கிறது.

ஒப்பிடாதீர்
எனவே, தமிழக மக்களால் வெறுக்கப்படுகிற, புறக்கணிக்கப்பட்டு வருகிற தமிழக பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டுப் பெற்ற படுதோல்வியை மூடிமறைக்க வாக்கு சதவிகித புள்ளி விவரங்களை வைத்துக்கொண்டு மூன்றாவது பெரிய கட்சி என்று கூறுவதைவிட மலிவான அரசியல் வேறு எதுவும் இருக்க முடியாது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற படுதோல்விக்குப் பிறகு இனி எந்தக் காலத்திலும் பா.ஜ.க. தனித்து நிற்பதற்குக் கனவில் கூட நினைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் தமிழக தேர்தல் களத்தில் மகத்தான வெற்றிகளைப் பெற்று வரலாறு படைத்து வருகிற காங்கிரஸ் கட்சியோடு தங்களை ஒப்பிட்டுப் பேசுவதை பா.ஜ.க. இனியாவது நிறுத்திக் கொள்வது நல்லது.
-
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications