உழைப்பை திருடாதீர்கள் ஜோதிமணி எம்.பி.! தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் பாய்ச்சல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பிறரது உழைப்பை திருடுவதாக ஒரு பதிவு வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி.

ராகுல்காந்தி தமிழகத்தில் நடத்திய நடைபயண நிகழ்ச்சியின் போது ஜோதிமணி எந்த பங்களிப்பையும் செலுத்தாமலேயே எல்லாவற்றையும் தாமே செய்து முடித்தது போல் கூறி வருவது சிரிப்பை வரவழைப்பதாக கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக ஜோதிமணி எம்.பி.யை விமர்சித்து பொன்.கிருஷ்ணமூர்த்தி விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

ஜோதிமணி

ஜோதிமணி

''அன்பு சகோதரியார்‌ நாடாளுமன்ற உறுப்பினர் அம்மையார் ஜோதி மணி அவர்களுக்கு வணக்கம்.இதை பேஸ் புக் வாயிலாக எழுத வேண்டிய அவல நிலை வந்து விட்டதை எண்ணி வருத்தம் அடைகிறேன்.தங்களிடம் கன்னியாகுமரியிலேய நேரடியாக கேட்டு விட நினைத்தேன்.தங்களை தனியாக சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை போனில் தங்களை அழைத்தேன் தாங்கள் எடுக்கவே இல்லை.ஆனால் வேறு வழியின்றி இதன் மூலம் தங்கள் பதிலை பெற விரும்புகிறேன்.''

ராகுல்காந்தி நடைபயணம்

ராகுல்காந்தி நடைபயணம்

''நான் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு நிறைய வசூல் செய்து விட்டதாக ஒரு முக்கிய தலைவர் ஒருவரிடம் கூறி உள்ளீர்கள்.இதை கேட்ட உடன் என் மனம் துடிதுடித்து விட்டது.நான் தங்களுக்கு சவால் விட்டு கூறுகிறேன், நான் ஒரே ஒருவர் இடத்தில் வசூல் செய்து இருக்கிறேன் என்று தாங்கள் நிருபித்து விட்டால் என்னுடைய மாநில துணைத் தலைவர் பதவியை அந்த நொடியே ராஜினாமா செய்து விடுகிறேன். அப்படி‌ தாங்கள் நிருபிக்கா விட்டால்‌ நீங்கள் உங்கள் எம்பி பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய தயாரா?''

சிரிப்பு வருது

சிரிப்பு வருது

''மேலும் தாங்கள் நன்றி சொல்லி பேஸ் புக்கில் பதிவு செய்து உள்ளதை படித்தேன். சிரிப்பு தான் வந்தது.உழைப்பை திருடாதீர்கள் இரவு பகல் பாராமல் இந்த வயதிலும் தமிழக காங்கிரஸ் தலைவர் அவர்கள் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் மாவட்டம் மாவட்டமாக கூட்டம் போட்டு ராகுல் வருகையின் முக்கியத்துவத்தை உணர்த்தி‌ வந்த கூட்டம் தான் அது.அவருக்கு துணையாக திரு இவிகேஎஸ் இளங்கோவன் திரு கே.வி.தங்கபாலு திரு சு.திருநாவுக்கரசர் போன்றவர்கள் எடுத்த பெரும் முயற்சி தான் அந்த கூட்டம் மறுக்க முடியுமா உங்களால்.''

பொன்.கிருஷ்ணமூர்த்தி

பொன்.கிருஷ்ணமூர்த்தி

''இந்த பாத யாத்திரையில் தங்கள் பங்களிப்பு என்ன என்பதையும் அந்த பேஸ் புக்கில் தாங்கள் குறிப்பிட்டு இருக்க‌வேண்டும்.எல்லா வற்றையும் நீங்களே செய்தது போல எதையுமே செய்யாத தாங்கள் எழுத எப்படி உங்கள் மனசாட்சி இடம் தருகிறது‌.எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த செலவில் பங்கு எடுத்து கொண்டார்கள் தங்கள் பங்களிப்பு இதில் என்ன அதில் கூட பங்களிப்பு இல்லாத தாங்கள் பேஸ் புக்கில் எழுதுவது எந்த வகையில் நியாயம்.உங்களை பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு சகோதரர் பொன் கிருஷ்ணமூர்த்தி நன்றி.''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+