டிரான்ஸ்பார்மர் கொள்முதல்! முறைகேடு என்ற பேச்சுக்கே இடமில்லை! மின்சார வாரியம் மிகத் திட்டவட்டம்!
சென்னை: டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் அமைச்சர் செந்தில்பாலாஜி முறைகேடு நிகழ்த்தியதாக அறப்போர் இயக்கத்தினர் முன் வைத்த குற்றச்சாட்டை அடியோடு மறுத்திறுக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம். இது தொடர்பாக மின் வாரியம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விவரம் வருமாறு;
*மின்மாற்றிகள் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும், சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களுக்கு மின்மாற்றிகளை எடுத்து சென்று வழங்குவதால், அவை சரக்கு வாகன கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும், மேற்காணும் நிறுவனங்கள் உள்ளுரிலேயே பல வருடங்களாக இயங்கி வருவதால், அவர்களுக்கு மற்ற நிறுவனங்களின் விலைப்புள்ளிகள் குறித்து தெரிய வாய்ப்புள்ளது.

*ஒப்பந்த விலைப்புள்ளிகள் அனைத்தும் கணினி மூலமாகவே பெறப்படுகிறது. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்திருந்தாலும், தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத்தன்மை சட்டம்-1998 (Tamil Nadu Tender Transparency Act 1998), விதி எண்.10(5)-ன்படி தமிழக மின்வாரியத்திற்குத் தேவையான மின்மாற்றிகளை தகுதி வாய்ந்த அனைத்து சிறு, குறு நிறுவனங்களுக்கும் பிரித்து வழங்கி மேற்படி விதிகளின் படி கொள்முதல் ஆணை அளிக்கப்பட்டுள்ளது.
*மின்மாற்றி தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மாதிரி விலைப்புள்ளி கோருவது கடந்த இரு ஆண்டுகளில் நிகழும் நிகழ்வுகள் அல்ல. இந்த நடைமுறை, கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகவே பின்பற்றப்பட்டு வருகிறது.
*புகாரில் மற்ற மாநிலங்களோடு மின்மாற்றிகளின் கொள்முதலை ஒப்பீடு செய்து ரூ.397.37 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளது. புகாரில் மின்மாற்றிகளின் வேறுபட்ட விவரக் குறியீடுகளின் அடிப்படையிலும், வேறுபட்ட மூலப்பொருட்களின் அடிப்படையிலும் உதாரணமாக காப்பர் மின்சுருள் கொண்ட மின்மாற்றிகளோடு ஒப்பிடு செய்யாமல் அலுமினியம் மின்சுருள் கொண்ட மின்மாற்றிகளோடு ஒப்பீடு செய்துள்ளது. மேலும், கீழ்கண்ட காரணங்களினால் புகாரில் நிர்ணயம் செய்த விலையானது தவறாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*புகாரில் மின்மாற்றிகளின் விலையை கணிக்கும்போது அலுமினிய மின்சுருள் பயன்படுத்தப்படும் மின்மாற்றிகளின் விலையை அடிப்படையாக வைத்து, 25 சதவீதம் விலையை அதிகரித்து தாமிர மின்சுருள் பயன்படுத்தப்படும் மின்மாற்றிகளின் விலையோடு ஒப்பீடு செய்திருப்பது தவறானதாகும்.
*அலுமினிய மின்சுருளை விட தாமிர மின்சுருள் விலை மூன்று மடங்கு அதிகமாகும். அலுமினியம் மின்சுருள் உபயோகிக்கும் மின்மாற்றிகளின் விவர குறியீடுகளும் காப்பர் மின்சுருள் உபயோகிக்கும் மின்மாற்றிகளின் விவர குறியீடுகளும் வெவ்வேறானவை. மேலும், இரு மின்மாற்றிகளின், ஆயுட்காலம், பழுது விகிதம் ஆகியவற்றை ஒப்பிடும்போது, காப்பர் மின்மாற்றிகளின் தரம் மிகவும்அதிகம் மற்றும் இதன் ஆயுட்காலம் 25 முதல் 30 ஆண்டுகள் வரை அதிகமான பழுதுகள் இன்றி இயங்கக்கூடியது.
*புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கொள்முதல் செய்யப்படும் மின்மாற்றிகள் மூன்று வருடகால உத்திரவாதத்துடன் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின்மாற்றிகள் ஐந்து வருடகால உத்தரவாதத்துடன் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகளின் உத்தரவாத காலம், பணம் செலுத்தும் கால அளவு, கொதிநிலை ஏற்புத் திறன் அளவு, காப்பர் மின்சுருள் அளவு போன்ற காரணிகளால், மற்ற மாநிலங்களில் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகளின் விலைகளோடு ஒப்பிட இயலாது.
*மேலும், புகாரில் கூறியவாறு அனைத்து நிறுவனங்களும் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்தாலும், அந்நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, அந்நிறுவனங்கள் வழங்கிய விலைப்புள்ளியைக் காட்டிலும் தோராயமாக ரூ.50,000 வரை விலைகுறைப்பு செய்துதான் அந்நிறுவனங்களிடமிருந்து மின்மாற்றிகளை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
*அரசு, எந்த நிலையிலும், முறைகேடுகள் நடைபெறுவதை அனுமதிக்காது. ஆகவே, மின்மாற்றிகள் கொள்முதலில் புகாரில் கூறியவாறு எவ்வித முறைகேடுகளும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெறவில்லை என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications