தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படுகிறதா.. மின்சார வாரியம் பரபரப்பு விளக்கம்
சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படுகிறதா என்பது குறித்து மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக மின் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் TNERC எனப்படும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது. இதில் ஆணையத் தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
வரும் ஜூலை மாதம் முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது. அதுவும் ஒரு யூனிட்டிற்கு 4.7 சதவீதம் உயர்த்தப்படும் என கூறப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த 9 மாதங்களுக்கு முன்புதான் மின் கட்டண உயர்வு அமலானது.

தமிழக மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி மின் பயன்பாடு மற்றும் புதிய இணைப்பிற்கான கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டது. இதையொட்டி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த ஜூலை 2022 ஆம் ஆண்டு மின்சார வாரியம் விண்ணப்பித்தது. இதையடுத்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. கடைசியில் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் புதிய மின் கட்டண உயர்வு அமலானது.
அதிலும் 35 சதவீதம் உயர்த்திக் கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் இந்த முறை மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் பரவியது.
ஆனால் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் பரவிய நிலையில் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பை ஈடுகட்டுவதற்காக மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அனுமதி வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த ஆண்டு விண்ணப்பிக்கப் பட்டது. அதையேற்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. சில பிரிவினருக்கு அதிகபட்சமாக 52% வரை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் விலைக்குறியீடு உயர்வின் அடிப்படையில் 2026 மற்றும் 2027ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டு ஜூலை மாதத்தில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் அனுமதித்தது. அதைத் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது செயல்படுத்தத் துடிக்கிறது.
நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் மாதத்தின் நுகர்வோர் விலைக்குறியீடு, அதாவது பணவீக்கத்தின் அளவு அல்லது 6%, ஆகிய இரண்டில் எது குறைவோ, அந்த அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப் பட வேண்டும். கடந்த ஏப்ரல் மாதத்தின் பணவீக்கம் 4.70% என்பதாலும், அது 6 விழுக்காட்டை விட குறைவு என்பதாலும் அடுத்த மாதம் முதல் 4.70% மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது. தமிழகத்தில் 10 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் 10 மாதங்களுக்கு முன்புதான் உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே விலைவாசி உயர்வு, கொரோனா பிரச்சினையால் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் மின்சார கட்டணம் உயர்வால் சாமானிய மக்கள் அவதிப்படுவார்கள் என அரசியல் கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications