TNEB இல் உங்கள் மொபைல் நம்பரை அப்டேட் செய்வது எப்படி? அப்படி செய்தால் நடக்கும் மேஜிக்
சென்னை: உங்கள் மொபைல் எண்ணை அப்டேட் செய்து மின்வெட்டுகள் மற்றும் பிற முக்கிய அறிவிப்புகள் பற்றிய தகவல்களைப் பெறலாம் என டான்ஜெட்கோ அறிவித்துள்ளது. உங்கள் மொபைல் எண்ணை புதுப்பிக்க TANGEDCO இணையதளமான https://www.tnebltd.gov.in/mobilenoentry/ பார்த்து அறியலாம் என்றும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் எங்கு மின் தடை ஏற்பட்டாலும் சென்னையில் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மின் நுகர்வோர் அழைப்பு மையமான, "மின்னகத்தை" 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். அப்படி குறைகளை தெரிவிக்கும் போதே, உங்கள் மொபைல் எண் மின்வாரியத்தின் இபி கனெக்சனுடன் இணைக்கப்பட்டிருந்தால், உங்களிடம் எந்த விவரமும் கேட்காமலேயே மின்சாரம் உங்கள் ஏரியாவில் எப்போது வரும், மின்தடை உள்ளதா என்பதை எளிதாக மின்வாரியத்தில் இருந்து கூறிவிடுவார்கள்.

இதுதவிர மின்வாரியத்தில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து கொண்டால் உங்களுக்கு மின்சார பில் இந்த மாதம் எவ்வளவு வந்துள்ளது என்பது எஸ்எம்எஸ் ஆக வந்துவிடும். அத்துடன் மின்தடை ஏற்பட போகிறது என்றாலோ அல்லது மாதாந்திர மின்தடை ஏற்பட போகிறது என்றால் உங்களுக்கு முன்னதாகவே எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும். எனவே எளிதாக மின்சார வாரியத்தின் அனைத்து தகவல்களையும் பெற முடியும்.
எனவே உங்கள் மொபைல் எண்ணை உடனே அப்டேட் செய்ய https://www.tnebltd.gov.in/mobilenoentry/ என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். அதில் , நீங்கள் தான் வீட்டின் உரிமையாளர் என்றால் அதற்கு அடையாளச் சான்றினைப் பதிவேற்ற வேண்டும். பகுதி பொறியாளரின் சரிபார்ப்பு மற்றும் உறுதிப்படுத்தலின் பேரில், மொபைல் எண் அப்டேட் செய்யப்படும்.
நீங்கள் தான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் என்றால் அதில் 'Owner cum Occupant mobile number' ( 'உரிமையாளர் மற்றும் குடியிருப்பாளர் மொபைல் எண்') என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
உங்கள் மொபைல் எண்ணை புதுப்பித்து மின்வெட்டுகள் மற்றும் பிற முக்கிய அறிவிப்புகள் பற்றிய தகவல்களைப் பெறுங்கள்.
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) September 6, 2023
உங்கள் மொபைல் எண்ணை புதுப்பிக்க TANGEDCO இணையதளம்: https://t.co/1sdtY05EIO - ஐப் பார்வையிடவும்.#MobileNumberUpdate #TANGEDCO #TNEB pic.twitter.com/y3XqHseEjy
ஒருவேளை வாடகைக்கு குடியிருப்பவர் என்றால் Occupant என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் சர்வீஸ் எண், மொபைல் நம்பரை கொடுத்து சப்மிட் செய்ய வேண்டும். அப்படி செய்தால் உங்கள் மொபைல் எண்ணை அப்டேட் செய்ய, OTP உங்கள் வீட்டின் உரிமையாளருக்கும், உங்களுக்கும் அனுப்பப்படும். ஒடிபியை பதிவிட்டால் உடனே அப்டேட் ஆகிவிடும்.
ஒருவேளை வீட்டின் உரிமையாளரின் எண் தவறானதாக இருந்தால் அல்லது கிடைக்கவில்லை என்றால், உரிமையாளரின் மொபைல் எண் புதுப்பிக்கப்படும் வரை, குடியிருப்பாளரால் அவர்களின் எண்ணை அப்டேட் செய்ய முடியாது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications