மின்வாரியம் ஸ்பெஷல் பிளான்.. லோ-வோல்டேஜ், கரண்ட் கட்-க்கு இனி குட் பை.. கோடை காலத்தில் ஜில் ஜில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை காலம் நெருங்கி கொண்டிருக்கிறது.. வெயில் வாட்ட துவங்கிவிட்டது.. தமிழகத்தில் இந்த ஆண்டு 2026 கோடைகால மின்தேவை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டு உள்ளது. எனவேதான் இதனை சமாளிக்க தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் இப்போது இருந்தே போர்க்கால அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதனை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

பொதுவாக வடசென்னை, தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல் மின் நிலையங்கள் மூலம் தினமும் சுமார் 3,000 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைத்து வந்தது.

TNEB

இதனிடையே காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரம் மூலமாக ஒட்டுமொத்த தேவையும் பூர்த்தி செய்யப்பட்டது.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மின்சார தேவை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், வரும் கோடையில் தடையற்ற மின்சாரம் வழங்க உடன்குடி மற்றும் வடசென்னை அனல் மின் திட்ட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது..

தமிழ்நாடு மின்சார வாரியம்

உடன்குடி திட்டத்தில் 95 சதவீத பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டன.. எனவே அங்கு உற்பத்தியை முழு திறனுக்கு கொண்டு வர அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.. அதேபோல வடசென்னை திட்டத்திலும் கூடுதல் மின்சாரம் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது..

வரும் கோடை காலத்தை மனதில் வைத்து இந்த 2 முக்கிய திட்டங்களையும் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர கடந்த ஜனவரி மாதமே பணிகள் முடுக்கி விடப்பட்டு விட்டன..

கரண்ட் பில்

தலைநகர் சென்னையை பொறுத்தவரை கோடை காலத்தில் மின்தேவை மிக அதிகமாக இருக்கும்.. சாதாரண நாட்களில் 3,300 மெகாவாட் தேவைப்படும் நிலையில், கோடையில் இது 4800 முதல் 5000 மெகாவாட் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதனை கருத்தில் கொண்டு வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் மின் விநியோக திறன் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது..

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "அண்ணாசாலை, மணலி, மீஞ்சூர், கொளத்தூர், அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளில் புதிதாக 7 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.. மேலும் ஏற்கனவே இயங்கி வரும் நிலையங்களில் 19 புதிய மின் மாற்றிகள் பொருத்தப்பட்டுள்ளன.. மயிலாப்பூர், கணேஷ் நகர், பருத்திப்பட்டு போன்ற இடங்களிலும் கூடுதல் மின் நிலையங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளன..

கோடை கால வெயில் - லோ வோல்டேஜ்

குறிப்பாக வடசென்னை பகுதியில் நீண்ட காலமாக இருந்து வந்த குறைந்த மின்னழுத்த புகார்களை தீர்க்க 1,360 விநியோக மின் மாற்றிகள் நிறுவப்பட்டு உள்ளன.. இதற்காக 868 கிலோமீட்டர் உயரழுத்த கேபிள்களும், 596 கிலோமீட்டர் தாழ்வழுத்த புதைபாதை கேபிள்களும் புதிதாக பதிக்கப்பட்டு உள்ளன..

மேலும் பாதுகாப்பு கருதி 5,000 பழைய மின்கம்பங்கள் அகற்றப்பட்டு புதியவை நடப்பட்டு உள்ளன.. 445 கிலோமீட்டர் தூரத்திற்கு சேதமடைந்த மின்கடத்தி கம்பிகளும் மாற்றப்பட்டு உள்ளன..

புரசைவாக்கம், மந்தைவெளி போன்ற இடங்களிலும் இந்த மேம்பாட்டு பணிகள் நடந்து உள்ளன.. இந்த விரிவான பணிகள் காரணமாக வரும் கோடை காலத்தில் பொதுமக்கள் எந்தவித கரண்ட் கட் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்" என்று மின்சார வாரிய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்..

மின்வாரியம் தங்கமான திட்டம்

சுருக்கமாக சொல்லப்போனால், கோடைக்கால மின் தேவையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதுமே மின்சார வாரியம் இப்போதே ரெடியாக உள்ளது.. வரும் நாட்களில் ஏதாவது ஸ்பெஷல் கொண்டாட்டங்கள் நடந்தால் கூட, சீரான மின்சாரம் வழங்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்கூட்டியே செய்யப்பட்டுள்ளது.. மின் பாதைகளில் பாதிப்பு ஏற்படாதவாறு கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தத்தில், வெயில் காலம் வருவதற்குள், அனல் மின் நிலைய திட்டங்களை விரைவாக முடித்து உற்பத்தியை பெருக்க மின்வாரியம் திட்டமிட்டிருப்பது பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+