TNPSC தேர்வு குளறுபடி.. நீதி விசாரணை நடத்திட வேண்டும்! சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தல்
சென்னை: நேற்று நடக்க இருந்த குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள், குளறுபடிகள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. திடீரென கடைசி நேரத்தில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெறும் 9,000 பேர் எழுதும் தேர்வுக்கு உங்களால் சரியாக சென்டர் போட முடியாதா? என்று டிஎன்பிஎஸ்சி-க்கு தேர்வர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இந்நிலையில், இது குறித்த நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "TNPSC குரூப் 2 , 2A முதன்மைத் தேர்வுகள் குளறுபடிகளால் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து TNPSC கட்டுப்பாட்டு அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.

இது போதுமான நடவடிக்கை அல்ல; ஏற்கெனவே குறைந்தபட்சம் ஆண்டுக்கு 10,000 குரூப் 4 பணியிடங்கள் , முழுமையான காலிப்பணியிடங்கள் நிரப்புதல் என போட்டித் தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படியான TNPSC தேர்வு குளறுபடிகள் என்பது தொடர்ந்து வருகிறது. இது எந்த விதமான வெளிப்படைத்தன்மையையோ, நம்பிக்கையையோ இளைஞர்கள் மத்தியில் உருவாக்காது. TNPSC குளறுபடிகள் குறித்து நீதி விசாரணை நடத்திட வேண்டும். தேர்வர்களுக்கு தேவையான கால இடைவெளியோடு உடனடியான நிவாரணங்களை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இந்த குளறுபடிகள் தொடர்பாக விசாரணை வேண்டும் என்று என்டிஏ கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. ஆனால், தற்போது திமுக கூட்டணியிலிருந்து குளறுபடிகளுக்கு எதிராக குரல் எழுந்திருக்கிறது. இத்தனைக்கும் நேற்று முன்தினம்தான், கார்ல் மார்க்ஸ் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து, இடதுசாரிகளுடனான கூட்டணியை மேலும் வலுப்படுத்தியிருந்தார். இப்படி இருக்கையில், சிபிஎம் தரப்பிலிருந்து குளறுபடிகளை கண்டித்து குரல் எழுந்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications