TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 1ஏ தேர்வுகள் இன்று தொடக்கம்! விதிமுறைகள் என்னென்ன?
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ தேர்வுகள் இன்று சென்னையில் தொடங்குகின்றன. இந்த தேர்வுகள் துணை ஆட்சியர், காவல் துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது.
ஜூன் மாதம் நடந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு இன்று முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. குரூப் 1 பதவிகளுக்கு 70 காலியிடங்களும் குரூப் 1 ஏ பதவிகளுக்கு 2 காலியிடங்கள் என மொத்தம் 72 காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு குறித்து டிஎன்பிஎஸ்சி சில அறிவுரைகளையும் தேர்வர்களுக்கு வழங்கியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ. சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 1 (தொகுதி I பணிகள்)இல் உள்ள பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு டிசம்பர் 1, 2, 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் முற்பகலில் சென்னையில் மட்டும் 18 மையங்களில் நடத்தப்பட உள்ளது.
தேர்வுக் கூடங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் (10 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் Videograph செய்ய உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எல்லா மையங்களிலும் ஜாமர் (Jammer) கருவிகள் பொருத்தப்பட உள்ளன.
தேர்வர்கள் தேர்வு நடைபெறும் நாளன்று, அதாவது 01.12.2025, 02.12.2025, 03.12.2025 மற்றும் 04.12.2025 முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடத்திற்கு தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 09.00 மணிக்கு முன்னரே செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
வினா விடைத்தாள் தொகுப்பில் கருமை நிற மை பேனாக்களைத் தவிர மற்ற நிற மை பேனாக்களை (Whitener, Sketch pens, Pencil, வண்ணப் பென்சில்கள், வண்ண மைப்பேனா, Crayons etc.,) உபயோகப்படுத்தக்கூடாது.
தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்; வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் விரிவாகப் படித்து முறையாக பின்பற்றுமாறும், அதில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணுச் சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனத்தையும் எடுத்துச் செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications