மக்களே ரெடியா? டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-1 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது? வெளியான தகவல்
சென்னை: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் நடைபெற்று நிறைவடைந்திருக்கும் நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. குரூப் 4 தேர்வு முடிவுகள் வருகின்ற அக்டோபர் மாதமும், குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இந்த மாதமும் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர் , இளநிலை நிர்வாகி, வனக் காவலாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் காலியாக உள்ளது. இந்த காலிப் பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய பதவிகளுக்கு குரூப் 2 மூலமும், உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் குரூப் 2 ஏ மூலமும் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், இந்திய ஆட்சிப் பணிக்கு அடுத்ததாக குரூப்-1 பதவிகள் கருதப்படுகிறது.
அதில், துணை கலெக்டர், உதவி வணிகவரி ஆணையர், உதவி இயக்குனர், துணை சரக பதிவாளர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை அலுவலர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் ஒன் மூலம் நிரப்பப்படுகிறது.
குரூப் 1 முதல் நிலை தேர்வு கடந்த ஜூன் 15ஆம் தேதி நடைபெற்ற நிலையில் மாநிலம் முழுவதும் சுமார் 2.5 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார். இந்த நிலையில் குரூப்-1 முதல் நிலை தேர்வு மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் வருவாய் கோட்டாட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவியாளர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு இந்த மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு சுமார் 14 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் 11,48,000 பேர் எழுதியிருந்தனர் தற்போது விடைத்தாள்களை சரிபார்க்கும் பணியானது தொடங்கி இருக்கும் நிலையில், அக்டோபர் மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
குரூப் 4 தேர்வு முடிவடைந்த நிலையில், விடைத் தாள்கள் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக குரூப் 4 தேர்வில் பாடத்திட்டத்துக்கு சம்பந்தமில்லாத கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், விடைத்தாள்கள் திருத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications