டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியானது.. மேஜர் அறிவிப்போடு வந்த ரிசல்ட்! விபரம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. ரிசல்டை வெளியிட்டுள்ள டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அதனை எப்படி பார்ப்பது? என்பது உள்ளிட்ட முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கான அட்டவணைகள் முன்கூட்டியே வெளியிட்டு தேர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த ஆண்டு குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு மூலம் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உயர் பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது.
அதன்படி துணை கலெக்டர் பணிக்கு 18, துணை போலீஸ் சூப்பிரண்டு பணிக்கு 26, வணிக வரி உதவி கமிஷனர் பணிக்கு 25, கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் பணிக்கு 13, கிராமப் மேம்பாட்டு உதவி இயக்குனர் பணிக்கு 7, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணிக்கு 3 இடங்கள் என மொத்தம் 92 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளமாக ரூ.56,100 முதல் 2 லட்சத்து 5 ஆயிரத்து 700 வரை கிடைக்கும். பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 92 பணியிடத்துக்கு 3,16,678 பேர் விண்ணப்பம் செய்தனர். இதையடுத்து நவம்பர் மாதம் 19ம் தேதி முதன்மை தேர்வு நடந்தது. இந்த தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதினர்.
இந்நிலையில் தேர்வு முடிந்து 5 மாதம் ஆன நிலையில் இன்று குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தற்போது ஒரு பணியிடத்துக்கு 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ள விபரம் வெளியாகி உள்ளது.
மேலும் டிஎன்பிஎஸ்சி முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்ததாக நடக்கும் முதன்மை தேர்வுக்கு தயாராகலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அடுத்தக்கட்ட தேர்வு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications