ரிசல்ட் வந்தாச்சு..குரூப் 1 முதல்நிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! எப்படி பார்ப்பது?
சென்னை: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை https://tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர் , இளநிலை நிர்வாகி, வனக் காவலாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் காலியாக உள்ளது. இந்த காலிப் பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி
துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய பதவிகளுக்கு குரூப் 2 மூலமும், உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் குரூப் 2 ஏ மூலமும் நிரப்பப்படுகிறது.
குரூப் 1
அந்த வகையில், இந்திய ஆட்சிப் பணிக்கு அடுத்ததாக குரூப்-1 பதவிகள் கருதப்படுகிறது. அதில், துணை கலெக்டர், உதவி வணிகவரி ஆணையர், உதவி இயக்குனர், துணை சரக பதிவாளர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை அலுவலர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் ஒன் மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா், வணிகவரி உதவி ஆணையா் உள்ளிட்ட 72 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தோ்வு கடந்த ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்றது.
குரூப் 1 தேர்வு முடிவுகள்
இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் https://tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குரூப்-1 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு வருகின்ற டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் நான்காம் தேதி வரை முதன்மை தேர்வு சென்னையில் நடைபெறுகிறது. முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து கட்டணம் செலுத்தி முதன்மை தேர்வில் கலந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப் 4
இதற்கிடையே இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு சுமார் 14 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் 11,48,000 பேர் எழுதியிருந்தனர். தற்போது விடைத்தாள்களை சரிபார்க்கும் பணியானது தொடங்கி இருக்கும் நிலையில், அக்டோபர் மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications