காத்திருந்தது போதும்.. ரெடியாகுங்க மக்களே! குரூப் 2, 2A தேர்வை அறிவித்த TNPSC! எப்போது தெரியுமா?
சென்னை: சார்பதிவாளர் வானவர் முதுநிலை ஆய்வாளர் இளநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜூலை 15ஆம் தேதியான இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப் 2 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

இதே போல உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் குரூப் 2ஏ மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் காலிப் பணியிடங்களை துரிதமாக நிரப்பி வரும் நிலையில், அடுத்தடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி வருகிறது.
கடந்த வாரம் க்ரூப் 4 தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், குரூப் 2, 2ஏ தேர்வுகள் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த ஆண்டு, குரூப் 2 பதவிகளுக்கு 507 காலிப்பணியிடங்களுக்கும், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 2 ஏ பதவிகளில் சுமார் 1820 காலி பணியிடங்கள் என மொத்தமாக 2327 காலி பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
இதற்கிடையே இந்தாண்டு குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சார்பதிவாளர், வனவர், தணிக்கை ஆய்வாளர், முதுநிலை ஆய்வாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளை நிரப்ப குரூப் 2 குரூப் 2a தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மொத்தம் 645 காலிப் பணியிடங்களை இந்த தேர்வு மூலம் நிரப்ப டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 15ஆம் தேதியான இன்று முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications