TNPSC: ரத்தான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மார்ச் 15-ல் நடைபெறும்! தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழக அரசு தேர்வாணைம் நடத்தும் குரூப் 2, 2 ஏ தேர்வுகள் நேற்றைய தினம் நடத்துவதாக இருந்து ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மார்ச் 15 ஆம் தேதி நடைபெறும் என புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அது போல் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வரும் பிப்ரவரி 28-க்குள் பதிவேற்றம் செய்து கொள்ளவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

— TNPSC (@TNPSC_Office) February 9, 2026
தமிழகத்தில் அரசு பணிகளுக்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர் உள்ளிட்ட குரூப் 2 பதவிகளுக்கும் முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர் உள்பட குரூப்-2ஏ பதவிகளுக்கும் என 828 காலிப் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு பிப்.8 காலை நடைபெறவிருந்தது.
இந்த நிலையில் சென்னையில் பல்வேறு மையங்களில் ஹால்டிக்கெட்டில் உள்ள கல்லூரிகளுக்கு தேர்வு செய்ய சென்ற தேர்வர்களின் பெயரே இல்லை என கூறி தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் ஒரே சென்டரில் தேர்வர்களின் எண்ணிக்கைகேற்ப வினாத்தாள்கள் இல்லாத நிலை இருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் 38 மையங்களில் தேர்வு நடைபெறவிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறால் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்திருந்தது. அதுகுறித்து அந்த அறிக்கையில், "சென்னையில் பிப்.8 நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப்2, 2ஏ பணிகள்) பிரதான தேர்வுகளுக்கான முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவிருந்த எழுத்துதேர்வுகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் 3 மையங்களில் நடத்த இயலவில்லை.
எனவே தேர்வர்கள் நலனை முன்னிட்டு இன்று நடைபெறவிருந்த இரண்டு தேர்வுகளும் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு பின்னர் வேறு தேதியில் நடத்தப்படும்.
இது குறித்து தேர்வர்கள் அனைவருக்கும் மறுதேர்வு நடைபெறும் நாளுக்கு 15 தினங்களுக்கு முன்பாக தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு விவரம் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் தகவல் அளிக்கப்படும்.
வருகிற பிப். 22 ஆம் தேதி நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப்-2) பொது அறிவு தேர்வு (தாள்-2) வழக்கம்போல் அன்றைய தினமே நடத்தப்படும். இது தொடர்பாக தேர்வர்களுக்கு மீண்டும் சரிபார்த்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) மீண்டும் பிப். 13 ஆம் தேதி வழங்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது புதிய தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 15 ஆம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதற்கான ஹால்டிக்கெட்டுகளை பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications