டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மிகப்பெரிய மாற்றம்.. விடைத்தாள் திருத்தும் முறை மாறுகிறது! இதுதான் தேவை
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடந்தது. இந்த நிலையில் இனி டிஎன்பிஎஸ்சி தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணியில் மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு எழுதிய பலர் இந்த முறை தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும்.. இதற்கு முன் இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு போல இது இல்லை என்றும் கூறியுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II.இல் (தொகுதி-II மற்றும் தொகுதி-IIA பணிகள்) உள்ளடங்கிய பதவிகளுக்கான பொதுவான முதல்நிலைத் தேர்வு (கொள்குறிவகை) இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 08:2024, நாள் 20.082024-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II இல் (தொகுதி II மற்றும் தொகுதி IIA பணிகள்) உள்ளடங்கிய பதவிகளுக்கான பொதுவான முதல்நிலைத் தேர்வு (கொள்குறிவகை) இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது.
தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் (Hall Ticket) தேர்வு நடைபெறும் இடத்திற்கு வந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தேர்வர்கள் தங்களுடைய ஆதார் அட்டை / கடவுச்சீட்டு (PASSPORT) ஓட்டுநர் உரிமம் நிரந்தர கணக்கு எண் அட்டை (PANCARD)/ வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளிநகலை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டனர்.. .
மாற்றம்: கடந்த சில நாட்களுக்கு முன் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடந்தது. இந்த நிலையில் இனி டிஎன்பிஎஸ்சி தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணியில் மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு தாள் திருத்தம் இரண்டு விதமாக நடக்கின்றன. ஓஎம்ஆர் தாள்களில் சரியான விடையை குறிப்பிடும் தேர்வுகளுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் முதன்மை தேர்வுகளில்தான் பிரச்சனை உள்ளது. இதில் கேள்விகளுக்கு விடைகளை எழுத வேண்டும்.
ஆனால் இதை திருத்துபவர்கள் படித்து பார்த்து திருத்துவது இல்லை என்று புகார்கள் உள்ளன. அதாவது சரியாக படிக்காமல் இதை திருத்துபவர்கள் மதிப்பெண் வழங்குகிறார்கள் என்று புகார் உள்ளது. இல்லையென்றால் திருத்த நீண்ட காலம் எடுக்கிறது.
இதை சரி செய்யவே இப்போது மென்பொருள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்பட்டு அப்லோட் செய்யப்படும்.
தனி தனியாக பாடவாரியாக பிரித்து அவை மென்பொருளில் அப்லோட் செய்யப்படும்.
அதற்கு அருகிலேயே விடைத்தாள் இருக்கும். இதை பார்த்து திருத்துபவர்கள் விடைகளை திருத்தலாம். இதில் ஒவ்வொரு பதிலையும் படிக்க ஒரு குறிப்பிட்ட நேரம் வழங்கப்படும்.
அந்த நேரத்திற்கு முன்பாக விடையை திருத்தவே முடியாது. அந்த நேரம் வரை முழுமையாக விடையை படிக்க வேண்டும். அதற்கு முன் விடையை திருத்த சாப்டவேர் அனுமதிக்காது.
இவை எல்லாம் ஜி.ஐ.எஸ்.(GIS) அமைப்பு மூலம் கண்காணிக்கப்படும்.
இது போக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறை தேர்வுகளை முதல் மூன்று முறை எழுதியும் தேர்ச்சி பெறாத 50 வயதினை கடந்த மாற்றுத்திறனாளிகள் அரசு பணியார்களுக்கு மீண்டும் துறைத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications