TNPSC Group 2: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முடிவுகள் வெளியீடு! எத்தனை பேர் சார் பதிவாளர்களானார்களோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இந்த தேர்வு முடிவுகளை www.tnpsc.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் குரூப் 1 முதல் குரூப் 8 உள்ளிட்டவைகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

tnpsc group 2 exam 2025 tamil nadu 2 2025

அந்த வகையில் குரூப் 2 தேர்வு நடத்த ஜூன் மாதம் அறிவிக்கை வெளியானது. அதன்படி குரூப் 2 பிரிவில் 534 காலிப்பணியிடங்களுக்கும், 2 ஏ பிரிவில் 2006 இடங்களுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வை 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதினர். இதனிடையே குரூப் 2, 2ஏ தேர்வுகள் முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை அடிப்படையாக கொண்டது என்பதால் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி முதன்மை தேர்வு நடந்தது. இது கொள் குறி வகை அடிப்படையில் நடத்தப்பட்டது.

கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி இரண்டாவது தாளான விரித்துரைக்கும் வகையிலான தேர்வு நடந்தது. இந்நிலையில், குரூப் 2 முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வு முடிவுகளை www.tnpsc.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 537 காலிப்பணியிடங்களுக்கான தேர்வில் 7,93,966 விண்ணப்பித்திருந்தனர். அதில் 5,83,467 பேர் தேர்வெழுதியுள்ளனர். 2,10,499 தேர்வு எழுதவில்லை. மேலும் 13 ஆவது முறையாக அட்டவணையில் குறிப்பிட்ட மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 53 பணி நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

குரூப் 2 தேர்வானது தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், வணிகவரித் துறை துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர், கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளர், இந்து சமய அறநிலையத் துறையில் தணிக்கை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி தணிக்கையில் உதவி ஆய்வாளர், அமைச்சுப் பணியாளர்களில் உதவியாளர்கள், இளநிலை கணக்காளர் போன்ற பதவிகளுக்கு நடத்தப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+