TNPSC Group 2: இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள்! ரூல்ஸ் என்ன! எதற்கெல்லாம் அனுமதி இல்லை
சென்னை: டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் க்ரூப் 2, க்ரூப் 2 ஏ தேர்வுகள் இன்று நடக்கிறது. இந்தத் தேர்வை 7.94 லட்சம் பேர் எழுதுகின்றனர். 2,327 காலிப் பணியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வுகள் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கி இந்தத் தேர்வு நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு அரசுப் பணிகள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலமாகவே நிரப்பப்பட்டு வருகிறது. இதற்காக க்ரூப் 1 முதல் பல்வேறு தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது.

இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி க்ரூப் 2 தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்வை மாநிலம் முழுக்க 7.94 லட்சம் பேர் எழுதுகின்றனர். காலை 9.30 மணிக்குத் தொடங்கிய இந்தத் தேர்வு சுமூகமாக நடந்து வருகிறது.
க்ரூப் 2 தேர்வு: முன்னதாக இது குறித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண். 08/2024, நாள்: 20.06.2024 இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- II (தொகுதி-II & II A பணிகள்)- இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (OMR முறை) முதனிலைத் தேர்வு நடைபெறவுள்ளது.
இத்தேர்வினை 7,93,966 விண்ணப்பதாரர்கள், த ிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2,763 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடர்பான மந்தண பொருட்கள் உரிய முறையில் கொண்டு செல்லப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
ரூல்ஸ் என்ன: தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் Video graph செய்ய உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் நாளன்று முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 09.00 மணிக்கு முன்னரே சென்று விடுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலை 9 மணிக்கு: 09.00 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர் ள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப் பட மாட்டார்கள். மேலும், இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மாறாக வேறெந்த ஆவணமும் அனுமதிக்கப்படாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாகப் பின்பற்றுமாறும், அதில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனங்களையும் கொண்டு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி.. வினாத்தாளை மாற்றி கொடுத்த அதிகாரி.. சுற்றி வளைத்த அரசு ஊழியர்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications