10 ஆண்டு இல்லாத தாமதம்.. வெளிவராத குரூப் 4 ரிசல்ட்.. தேர்வர்களின் வேதனைகளை கூறும் மீம்கள்.. கண்ணீர்
7,301 அரசு பணிகளை நிரப்ப கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த குரூப் 4 தேர்வை 18 லட்சம் பேர் எழுதியும் இன்னும் ரிசல்ட் வெளியாகவில்லை.
சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு நடந்த குரூப் 4 தேர்வை 18 லட்சம் பேர் எழுதிய நிலையில் இன்னும் ரிசல்ட் வெளியிடப்படவில்லை. இதனால் டிஎன்பிஎஸ்பி குரூப் 4 தேர்வு ரிசல்ட்டை உடனடியாக வெளியிட வேண்டும் எனக்கூறி இன்று ட்விட்டரில் WeWantGroup4Results எனும் ஹேஷ்டேக் டாப் டிரெண்ட் ஆன நிலையில் இதுதொடர்பான மீம்கள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.
டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் போட்டி தேர்வுகளை நடத்தி தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதாவது 7,301 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் குரூப் 4 தேர்வுகள் நடந்தது. மொத்தம் 18 லட்சம் பேர் எழுதிய நிலையில் இன்னும் கூட தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

ட்விட்டரில் டாப் டிரெண்டிங்
பொதுவாக குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாத இடைவெளியில் வெளியாகும் என்ற நிலையில் 7 மாதங்களாகியும் ரிசல்ட் வெளியாகவில்லை. இதனால் குரூப் 4 தேர்வு முடிவை வெளியிடாமல் டிஎன்பிஎஸ்சி மந்தமாக செயல்படுகிறது. உடனடியாக குரூப் 4 தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனடியாக டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும் என தேர்வர்கள் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர். மதியம் 1.45 மணிக்கு நிலவரப்படி #WeWantGroup4Results எனும் ஹேஷ்டேக்கில் மொத்தம் 1 லட்சம் ட்விட்கள் செய்யப்பட்டு இருந்தன.

வேகமாக பரவும் மீம்கள்
இந்நிலையில் தான் தற்போது ட்விட்டரில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய தேர்வர்கள் வீட்டில் படும் வேதனை, கண்ணீரை எடுத்து கூறும் வகையிலும், மந்தமாக செயல்படும் டிஎன்பிஎஸ்சியின் நிலையை எடுத்து கூறுவதும் போன்ற மீம்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அதன் விபரம் வருமாறு:

முதல் பதிவு
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2013ல் 5,566 பதவிகளுக்கு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவு 6 மாதங்களில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 7 மாதங்கள் கடந்தும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்பதை குறிப்பிட்டுள்ளதோடு,‛‛அரசிடம் பணஉதவியோ! TNPSCல் சலுகையோ! நாங்கள் கேட்கவில்லை. விவசாயி வயலை உரிய காலத்தில் அறுவடை செய்யாவிட்டால் பலலட்சம் நெல்மணிகள் பதராகம்! குடும்பத்தை காக்க, மக்கள் சேவை செய்ய காத்திருக்கம் எளிய தேர்வர்களும் அதுபோல்தான்.. நாங்கள் கேட்பது எங்கள் எதிர்காலத்தை #WeWantGroup4Result எனும் ஹேஷ்டேக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

2வது பதிவு
இன்னொரு பதிவு கத்தி படத்தில் விஜயிடம் பெண் ஒருவர் கேட்பது போன்ற மீம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் நபர்களின் வலி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் பெண் ஒருவர் விஜயிடம், ‛‛டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் அப்படினா யாரு அண்ணா'' என கேட்க, அதற்கு விஜய், ‛‛குரூப் 4 ரிசல்ட் நவம்பர், பிப்ரவரி, மார்ச் மாதம் என எவ்வளவு காலம் தாமதம் செய்தாலும் டிஎன்பிஎஸ்சி நம்பி வாழ்றவன் தான் மா'' என கூறி கண்கலங்கும் வகையில் அந்த மீம் அமைந்துள்ளது.

3வது பதிவு
இந்த பதிவு சார்பட்டா பரம்பரையில் ஆர்யாவும், பசுபதியும் சைக்கிளில் செல்லும் வகையில் அமைந்துள்ளது. அதில் சைக்கிள் அழுத்தும் ஆர்யா தேர்வராகவும், பசுபதி டிஎன்பிஎஸ்சி போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் பசுபதியை பார்த்து ஆர்யா, ‛‛வாத்தியாரே நீ மட்டும் ரிசல்ட்டை ரிலீஸ் பண்ணனு வையேன்.. பல பசங்களுக்கு கல்யாணம் நடக்கும் வாத்தியாரே'' என கூறியுள்ளார். இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் அரசு வேலை கிடைத்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என பலரும் காத்திருப்பதை நாம் கேள்வி பட்டிருப்போம். அவர்களின் வேதனையை வெளிக்காட்டும் வகையில் தான் இந்த மீம் அமைந்துள்ளது.

4வது பதிவு
இந்த பதிவில் ஒருவர் , ‛‛குரூப் 1 எழுதுனவன் எப்போ ரிசல்ட் வரும்ன்னு காத்திருக்கான். குரூப் 2 மெயின்ஸ் எழுதுனவன் எப்படி திருத்துவாங்களோ, எந்த வருஷம் ரிசல்ட் போடுவாங்கனு இருக்கான். குரூப் 4 எழுதுனவன் ரிசல்ட்னு ஒன்னு இருக்கானு தேடிட்டு இருக்கான். இதெல்லாத்துலயும் வாய்ப்பு இழந்தவன் இந்த வருஷம் ஒரு எக்ஸாமும் இல்லையேனு்னும் பீட் பண்ணிட்டு இருக்கான். ஆக மொத்தத்துல டிஎன்பிஎஸ்சி படிக்கிற எவனும் நிம்மதியா மட்டும் இல்ல கோபி எனும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் வலியை வெளிக்காட்டி மீம் வெளியிடப்பட்டள்ளது.

5வது பதிவு
வெற்றி கொடிக்கட்டு படத்தில் நடிகர்கள் பார்த்திபன் சார்லி இடையே நடக்கும் உரையாடல் போன்று இந்த மீம் அமைந்துள்ளது. அதில் சார்லி டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் நபராகவும், பார்த்திபன் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இதில் சார்லி ‛‛விட்டில் எவ்ளோ நாள் தண்ட சோறு சாப்பிடுவேனு கேக்குறாங்க. சொந்தக்காரங்க இன்னும் உனக்கு வேலை கிடைக்கவில்லையா? வீட்டிலேயே இருக்கிற'' என கேட்க, டிஎன்பிஎஸ்சி நிர்வாகமாக சித்தரிக்கப்பட்டுள்ள பார்த்திபன், ‛‛எக்ஸாம் நல்லா எழுதி இருக்கிறேன். இந்த மாதம் ரிசல்ட் மட்டும் விட்டாங்கனா நான் வேலைக்கு போய்டுவேனு சொல்லு'' என கூறும் வகையில் மீம் அமைந்துள்ளது.

விரைவில் வெளியிட வலியுறுத்தல்
இதுதவிர இன்னும் இதுபோல் பல மீம்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இதன்மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி எதிர்காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் தேர்வர்களின் உணர்வுகளை அரசுக்கு புரிய வைக்க முயன்றுள்ளனர். இதனால் டிஎன்பிஎஸ்சி விரைவில் குரூப் 4 தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் வலியுறுத்தி உள்ளனர்.
-
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
பென்ஷன் வாங்குகிறீர்களா.. தேடி வந்த குட் நியூஸ்: பென்ஷன் ஃபண்ட் கட்டணத்தில் மாற்றம்.. பணம் கொட்டும் -
MBBS Job: மத்திய அரசில் மருத்துவ அதிகாரி வேலை.. யுபிஎஸ்சி அறிவிப்பு! 1,358 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா -
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலை.. நாளை இண்டர்வியூ -
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
IT JOBS: சென்னை டிசிஎஸ் அலுவலகத்தில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. இந்த வேலைவாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications