டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியானது.. 5,990 பணியிடங்களுக்கு அடிக்கப்பட்ட போஸ்டிங்!
சென்னை: 5,990 பணியிடங்கள் கொண்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியானது.
டிஎன்பிஎஸ்சி அறிவித்த குரூப்-2 பதவிகளில் 116 இடங்களுக்கும், குரூப்-2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 413 இடங்களுக்கும் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் முதல்நிலைத் தேர்வை எழுதினார்கள். அதில் வெற்றி பெற்ற 57 ஆயிரத்து 641 பேர் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு எழுத அழைக்கப்பட்டார்கள். அவர்களில் 51 ஆயிரத்து 987 பேர் முதன்மைத் தேர்வை கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 25-ந் தேதி எழுதி இருந்தார்கள்.

இவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் கடந்தாண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மதியம் என இரு வேளைகளில் 186 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தன. குறிப்பாக காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது.
முதன்மைத் தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு நீண்ட தாமதத்திற்கு பிறகு நிறைவு பெற்றது. அரசு வெளியிட்ட தகவலின்படி, குரூப்-2 பதவிகளில் 161 இடங்களும், குரூப்- 2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 990 இடங்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
15:12.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத்திட்டம் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து குரூப்-2 தேர்வு முடிவுகள் 2024 ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இன்று நேர்காணல் அல்லாத குரூப்-2 ஏ பதவிகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.
மொத்தமாக 5,990 பணியிடங்கள் கொண்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது .
அதில், தொகுதி-II முதன்மை எழுத்துத் தேர்வு தொடர்பாக அதிக அளவிலான தேர்வர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் இருந்ததாலும், மேலும், ஒரே நேரத்தில் மதிப்பீடு செய்ய வேண்டிய தேர்வுகள் மற்றும் பிறதேர்வுகள் நடத்தவேண்டியிருந்ததாலும், தொகுதி-II முதன்மை எழுத்துத் தேர்வு தொடர்பான தேர்வு முடிவுகள் தேர்வாணைய அட்டவணையில் டிசம்பர் 2023-இல் வெளியிடப்படுவதாக ஏற்கெனவே தற்காலிக தெரிவு முடிவு அட்டவணை (Tentative Result Declaration Schedule) குறித்த அட்டவணையில் அறிவிக்கப்பட்டது., என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக இந்த தேர்வு முடிவுகள் டிசம்பர் 16ஆம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. முன்னதாக, முதல்நிலைத் தேர்வை தேர்வர்கள் 2022 மே மாதத்தில் எழுதிய நிலையில், 1.6 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 டிசம்பரில் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதில் நியாயமே இல்லை என்று புகார்கள் வைக்கப்பட்டது. இதையடுத்து குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டது.
அதன்படியே தற்போது ன்று நேர்காணல் அல்லாத குரூப்-2 ஏ பதவிகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. மொத்தமாக 5,990 பணியிடங்கள் கொண்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியானது.
இந்த https://www.tnpsc.gov.in/document/Oraltestmarks/03_2022_RANKLIST_PHASE_II.pdf லிங்கில் ரிசல்ட்டை தெரிந்து கொள்ள முடியும்.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி












Click it and Unblock the Notifications