நடக்காதுன்னு சொன்னாங்க.. சிறைவாசிகள் ரிலீஸ் ஆகிட்டாங்க! மீதம் இருப்போரையும் விடுவிக்க சொல்லும் TNTJ
சென்னை: தமிழ்நாட்டில் நீண்ட நாள் ஆயுள் சிறைவாசிகள் 10 பேரை விடுதலை செய்ய முயற்சிகளை மேற்கொண்ட தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுச்செயலாளர் அப்துல் கரீம் நன்றி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "நீண்ட கால சிறைவாசிகளை விடுவிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அனைத்து முன்னெடுப்புகளையும் செய்த தமிழக அரசிற்கு நன்றி. இஸ்லாமிய சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கை முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை. தமிழகத்தில் ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாளின் போது கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையின் போது மட்டும் மதத்தின் பெயரால் பாகுபாடு காட்டப்பட்டது. இதற்கான பல போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் மூலமாக இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பல கட்ட தீர்மானங்களின் போதும், ஆட்சியாளர்களைச் சந்திக்கும் போதும் வலியுறுத்தி வந்தோம். தொடர்ச்சியாக சில முஸ்லிம் அமைப்புகளும், மற்ற கொள்கை சார்ந்த இயக்கங்களும், அரசியல் கட்சியினரும் போராடி வந்தனர்.
தமிழக அரசு சார்பாக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கோப்புகள் நீண்ட நாட்களாகக் கையெழுத்து போடாமல் கிடப்பில் இருந்தால் விடுதலையும் கால தாமதமானது. சாத்தியமில்லை என்று பேசப்பட்ட முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை ஜனநாயகப் போராட்டங்கள் மூலமாகச் சாத்தியமாகி இருக்கிறது.
தற்போது
1. சையத் அலி
2. பாபு
3. அபுதாஹிர்
4. ஜாஹிர்
5. சாஹூல் ஹமிது
6. ஹாரூன்
7. யாஸுத்தீன்
8. நெல்லை இப்ராஹிம்
9. சேக் சிந்தா மதார்
10. கூலை இப்ராஹிம்
ஆகியோர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான போராட்டக் களத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்களுக்கும், களப் போராட்டம் நடத்திய எங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அனைத்து முன்னெடுப்புகளை செய்த தமிழக அரசிற்குத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மீதமுள்ள முஸ்லிம் சிறைவாசிகளையும் விரைவாகச் சட்டத்தின் அடிப்படையில் விடுதலை செய்ய ஆவன செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications