தோடர், நரிக்குறவர்.. பழங்குடியின மக்களின் மொழி வளங்களை பாதுகாக்க ரூ. 2 கோடி! பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: சௌராஷ்ட்ரா, வடுகு மொழிகளையும் தோடர், நரிக்குறவர் உட்பட பல்வேறு பழங்குடியின மக்களின் மொழி வளங்கள் எதிர்கால தலைமுறையினருக்கு கடத்தும் வகையில் இனவரைவியல் - ஆவணப்படுத்தி பாதுகாக்க தமிழ்நாடு அரசு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் என்று சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2024-2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கலின் போது ஆற்றிய உரையில், "இந்தியாவில் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கடைக்கோடி தமிழர்களும் எளிதில் அணுகக்கூடிய ஒப்பற்ற தலைவராக உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வளர்ச்சிப்பாதையில் தமிழ்நாடு வெற்றிநடை போட்டு வருகிறது. 100 ஆண்டுக்கு முன்பு 1924-ல் நீதிக்கட்சி ஆட்சியில் காவிரியில் மேட்டூர் அணை கட்டும் அறிவிப்பு வெளியானது என்று கூறினார்.
மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது மத்திய அரசு என கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு இதுவரை திமுக அரசின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சி முதல் தற்போதைய மு.க.ஸ்டாலின் ஆட்சி வரையில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார்.
நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிப்புகளை வெளியிட்ட தங்கம் தென்னரசு, சௌராஷ்ட்ரா, வடுகு மொழிகளையும் தோடர், நரிக்குறவர் உட்பட பல்வேறு பழங்குடியின மக்களின் மொழி வளங்கள் எதிர்கால தலைமுறையினருக்கு கடத்தும் வகையில் இனவரைவியல் - ஆவணப்படுத்தி பாதுகாக்க தமிழ்நாடு அரசு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் என்று சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications