தமிழகத்தில் ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா.. சென்னையில் கணிசமாக சரிவு
சென்னை: தமிழகத்தில் இன்று 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10108 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தினமும் 500க்கும் அதிகமானோருக்கு கொரோனா அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக 500க்கும் குறைவான நபர்களுக்கே பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
வியாழக்கிழமை மாலை நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்து இருந்தது. இந்நிலையில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 434 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10108 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகம்
தமிழகத்தில் இன்று சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று 310 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 21 பேருக்கும், செங்கல்பட்டில் 20 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 11 பேருக்கும், மதுரையில் 11 பேருக்கும், திருநெல்வேலியில் 22 பேருக்கும், தூத்துக்குடியில் 10 பேருக்கும், கன்னியாகுமரியில் 4 பேருக்கும், கடலூரில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூரில் 2 பேருக்கும், தென்காசியில் 2 பேருக்கும், தஞ்சாவூர், விருதுநகரில் தலா ஒருவருக்கும், திருவண்ணாமலையில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

359 பேர் குணம்
தமிழகத்தில் வெள்ளிக்கிழமையான இன்று மட்டும் 359 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பினர் இதன் மூலம் ஒட்டுமொத்தமாக மே 15ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 2599 பேர் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் 7436 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நிறைய பேருக்கு சோதனை
மே 15 ம் தேதியான இன்று மட்டும் 10883 பேருக்கு 11 672 சாம்பிள்கள் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 434 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இன்றுடன் சேர்த்து இதுவரை 2,90,905 பேருக்கு 303104 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

5 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 53 வயது பெண், 32 வயது ஆண், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 57 வயது ஆண், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 61 வயது ஆண், தூத்துக்குடியில் 34 வயது ஆண் ஆகியோர் உயிரிழந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்த 5 பேரில் 3 பேருக்கு கிட்னி பிரச்சனை இருந்தது.

எத்தனை ஆண்கள்
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 434 பேரில் 253 பேர் ஆண்கள், 181 பேர் பெண்கள் ஆவர், ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 10883 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 6642 பேர் ஆண்கள், 3463 பேர் பெண்கள், 3 பேர் திருநங்கைகள் ஆவர். மே 15ம் தேதி நிலவரப்படி 4598 பேர் கொரோனா அறிகுறிகளுடன் ஐசலேசன் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 7435 பேர் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications