தமிழகத்தில் இதுவரை இல்லாத மோசமான பாதிப்பு.. ஒரே நாளில் 1927 பேருக்கு கொரோனா தொற்று!
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக புதன்கிழமை ஒரே நாளில் 1927 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கடுமையாக உயர்ந்து வருகிறது. முந்தைய நாளை விட அடுத்த நாள் அதிகமான பாதிப்பை சந்திக்கிறது.
அந்த வகையில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 1927 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பாதிப்பு
தமிழகத்தில் தொடர்ந்து 11வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் 11வது நாளாக இரட்டை இலக்கத்தில் உள்ளது. கடந்த ஐந்து நாட்களாக 1500ஐ கடந்துள்ளது. தமிழகத்திற்குள் மட்டும் இன்று 1897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை விட்டு வெளியே பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த 30 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையில் கொரோனா தொற்றால் ஒரு நாளில் 1392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,937 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 182 பேர், திருவள்ளூரில் 9105 பேர், காஞ்சிபுரத்தில் 33 பேர், ராணிப்பேட்டையில் 24 பேரும், தூத்துக்குடி மற்றும் திருவண்ணாமலையில் 23 பேருக்கும், மதுரையில் 10 பேரும், கடலூர் மற்றும் விழுப்புரத்தில் 7 பேரும், தருமபுரி, திண்டுக்கல்லில் தலா 3 பேரும், தேனியில் 9 பேரும், கன்னியாகுமரியில் 5 பேரும், கிருஷ்ணகிரியில் ஒருவரும், நாகப்பட்டினத்தில் 4 பேரும், நாமக்கல்லில் 2 பேரும், புதுக்கோட்டையில் 5 பேரும், ராமநாதபுரத்தில் 6 பேரும், சேலத்தில் ஒருவரும், சிவகங்கை மற்றும் தஞ்சாவூரில் தலா 2 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவாரூரில் 12 பேரும், விருதுநகரில் 5 பேரும் திருநெல்வேலியில் 6 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குணம் அடைந்தவர்கள்
தமிழகத்தில் இன்று மட்டும் 1,008 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஜூன் 10ம் தேதி (இன்று) நிலவரப்படி தமிழகத்தில் 19,333 பேர் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் 17,179 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சென்னையில் தான் மிக அதிகமாக 13,085 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மிக அதிகமான சோதனை
ஜூன் 10ம் தேதியான இன்று மட்டும் மிக அதிகபட்சமாக 17,675 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 6,38,846 சாம்பிள்கள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தனிநபர்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் இதுவரை இன்று மட்டும் 16,667 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுடன் சேர்த்து இதுவரை 6,09,856 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனாவால் மரணம்
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 12 அரசு மருத்துவமனையிலும், 7 தனியார் மருத்துவமனையிலும் ஏற்பட்டது. தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 326ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்த 19 பேரில் 16 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் 3 பேர் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 3 பேரில் 2 பேர் சென்னையில் தான் இறந்துள்ளார்கள். இன்று உயிரிழந்த 19 பேரில் 4 பேர் வேறு எந்த நோய் பாதிப்பும் இல்லாதவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

ஆண் பெண் விவரம்
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,927 பேரில் 1,162 பேர் ஆண்கள், 765 பேர் பெண்கள் ஆவர், ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 36,841 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 22,828 பேர் ஆண்கள், 13,996 பேர் பெண்கள், 17 பேர் திருநங்கைகள் ஆவர். ஜூன் 10ம் தேதி நிலவரப்படி 17,179* பேர் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் 77 மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் உள்ளன. இதில் 44 அரசு மருத்துவமனையில் உள்ளது. 33 தனியார் மருத்துவமனையில் உள்ளது.
-
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications