today gold price: தாக்குப் பிடிக்க முடியாது..தாறுமாறாக உயரும் தங்கம் விலை! டிரம்ப் தான் காரணமாம்.. பரபர பின்னணி!
சென்னை: வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை உச்சம் தொட்டு இருக்கிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 10,000 என்பதை கடந்து ஒரு கிராம் 10 ஆயிரத்து 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 80 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் தங்கத்தின் விலை இன்னும் உயரும் எனவும், இதற்கு டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளை காரணம் என தங்க வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்தி லால் சலானி கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தி இருக்கும் நிலையில் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் தற்போது பண்டிகைக் காலம் மற்றும் திருமண சீசன் காரணமாக தங்க நகைகளின் விற்பனை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று வரலாற்றில் இல்லாத வகையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. கடந்த சில மாதங்களில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏற்றமாகவே இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 57 ஆயிரம் என்ற நிலையில் இருந்து தற்போது 80 ஆயிரத்தைக் கடந்து இருக்கிறது.

தங்கம் விலை
இது தங்கத்தின் விலையில் வரலாறு காணாத உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. திங்கட்கிழமை 680 ரூபாயும், புதன்கிழமை 160 ரூபாயும், வெள்ளிக்கிழமை 640 ரூபாயும் தங்கத்தின் விலை உயர்ந்தது. நேற்று சவரனுக்கு 70 ரூபாய் உயர்ந்து 78 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை சாதனை
இந்த நிலையில் வரலாற்றில் இல்லாத வகையில் இன்று சவரனுக்கு 140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 10,005 ரூபாய்க்கும், சவரனுக்கு 1110 ரூபாய் உயர்ந்து 80 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு 3050 ரூபாய் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரை மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 20 ஆயிரம் உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஜெயந்தி லால் சலானி
இந்த நிலையில் தங்கத்தின் விலை மேலும் உயரும் எனக் கூறி இருக்கிறார் தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவரான ஜெயந்தி லால் சலானி. இது தொடர்பாகப் பேசி உள்ள அவர், "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சில தவறான முடிவுகள் உலகப் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது. மற்ற உலக நாடுகள் டாலரின் மீதான நம்பிக்கையை இழந்து தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்திருப்பதால் இந்த விலை உயர்வுக்கு அதுவும் ஒரு காரணமாக மாறியுள்ளது.
சர்வதேச சந்தை
மேலும் இந்தியா போன்ற நாடுகள் தங்கள் கருவூலத்தில் டாலருக்கு பதிலாகத் தங்கத்தை அதிக அளவு வாங்கி இருப்பு வைக்க ஆரம்பித்திருக்கின்றன. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தற்போது தங்கத்தின் விலை 80,000 என்ற விலையைக் கடந்திருக்கும் நிலையில், இன்னும் சிறிதளவு விலை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications