தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா,.. ஒரே நாளில் 2532 பேருக்கு கொரோனா.. 53 பேர் மரணம்
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, முதல் முறையாக இன்று ஒரே நாளில் 2532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் 5ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையான இன்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,377ஆக உயரந்துள்ளது.
தமிழகத்தில் வழக்கம் போல் கொரோனாவால் சென்னையைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று கொரோனாவால் 1493 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் தமிழகத்தின் பிற பகுதிகளில் 1039 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

40 சதவீதம் தமிழகம்
அதாவது சுமார் 60 சதவீத்ம் பாதிப்பு சென்னையிலும் 40 சதவீத பாதிப்பு தமிழகத்தின் இதர பகுதிகளிலும் உள்ளது. முன்பு சென்னையில் 80 சதவீதமும் பிற பகுதிகளில் 20 சதவீதம் என்ற அளவில் பாதிப்பு இருந்தது. ஆனால் அது சென்னையில் 60 சதவீதம் ஆகவும் பிறபகுதிகளில் 40 சதவீதம் ஆகவும் மாறி உள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு சென்னை தவிரி பிற பகுதிகளில பரவலாக தமிழகத்தில் அதிகரித்திருப்பது உறுதியாகி உள்ளது.

32 ஆயிரம் பேர் குணம்
தமிழகத்தில் இன்று மட்டும் 1438 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஜூன் 21ம் தேதி (இன்று) நிலவரப்படி தமிழகத்தில் 32,754 பேர் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் 25,863 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சென்னையில் தான் மிக அதிகமாக 17683 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

30 ஆயிரம் பரிசோதனை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,401 சாம்பிள்கள் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 8,92,612 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 29,963 பேருக்கு இன்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.ஒட்டுமொத்தமாக 8,51,557 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் .13 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 49400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதை கடந்த 7043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 வயதுக்கு உட்பட்ட 2934 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் அதிகம்
கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 757 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்த 53 பேரில் 16 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்த 53 பேரில் பெரும்பாலானோர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications