திடீரென எழுப்பிவிட்ட சபாநாயகர்.. நயினார் நாகேந்திரன் செம ஷாக்! “என்னை விட்ருங்க” கடைசியில் ஒரே போடு!
சென்னை : வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் அறிவிப்புக்கு நன்றி கூற பாஜகவின் நயினார் நாகேந்திரனை சபாநாயகர் அப்பாவு அழைக்க, அவர் திகைத்துப்போய் தயங்கினார். இதையடுத்து எழுந்து பேசிய அவர் பெரியார் - வைக்கம் என்ற வார்த்தைகளையே குறிப்பிடாததோடு ஸ்ரீராமநவமி எனத் தெரிவித்துவிட்டு அமர்ந்தார்.
வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை, தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரனை பேச அழைத்தார் சபாநாயகர் அப்பாவு.
முதலில் பேச மறுத்த நயினார் நாகேந்திரன் பின்னர், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பற்றி எதுவும் சொல்லாமல் ராம நவமியை நினைவூட்டி பேசினார்.

110 விதியின் கீழ் அறிவிப்பு
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்திற்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டுப் பேசினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், பெரியார் நடத்திய சமூகநீதி போராட்டங்களில் வைக்கம் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. வரலாற்று சிறப்புமிக்க வைக்கம் போராட்டத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்களும், மாணவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் ஓராண்டு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும், கேரளாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் நானும் பங்கேற்கிறேன் என்று அறிவித்தார்.

என்னை விட்ருங்க
இதையடுத்து ஒவ்வொரு கட்சியை சார்ந்த சட்டமன்ற கட்சி தலைவர்களும் அவரவர் கட்சி சார்பில் இந்த அறிவிப்பை வரவேற்றுப் பேசி அமர்ந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிந்தனைச் செல்வன், முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்று, நன்றி தெரிவித்துவிட்டு அமர்ந்த நிலையில், அடுத்ததாக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனை பேச எழுப்பினார் சபாநாயகர் அப்பாவு. உடனே தயங்கிய நயினார் நாகேந்திரன், என்னை விட்ருங்க.. அடுத்து பாமகவின் ஜிகே மணியை பேசச் சொல்லுங்க என சிரித்தபடி சைகை காட்டினார்.

விடாத அப்பாவு
பாஜகவின் சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் பெரியார் பற்றிய நிகழ்ச்சிகளை நடத்த அறிவித்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கத் தயங்கிய நிலையில், சபாநாயகர் அப்பாவு விடாமல், "ஒரு நன்றி தானே சொல்லணும்.. எதிர்த்துப் பேச முடியாது. நன்றி தான் சொல்ல முடியும். சொல்லிட்டு உட்காருங்க" என்றார். இதையடுத்து, சபாநாயகர் பேச்சை தட்ட முடியாமல் எழுந்தார் நயினார் நாகேந்திரன்.

ஸ்ரீராமநவமி
பாஜகவின் நயினார் நாகேந்திரன் சிரித்தபடியே எழுந்து, "முதலமைச்சர் கலந்து கொள்ளும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் மற்றும் அவர் ஏற்பாடு செய்யும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வாழ்த்துகள். அதே போல இன்று ஸ்ரீராமநவமி - ராமர் பிறந்த தினம் என்பதையும் இந்த நேரத்திலே பதிவு செய்து அமர்கிறேன்.. நன்றி வணக்கம்" எனப் பேசிவிட்டு அமர்ந்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications