தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு! தயாநிதி மாறன், திருமாவளவன், ஜோதிமணி வேட்புமனு தாக்கல் செய்தனர்
சென்னை: தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இன்று தயாநிதி மாறன், திருமாவளவன், ஜோதிமணி, டிடிவி தினகரன் என பல முக்கிய வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்த வரையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. திமுகவை பொறுத்த அளவில், 21 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கியுள்ளது. மற்ற தொகுதிகளில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் களம் காண்கின்றன.

வேட்பாளர் பட்டியலை பொறுத்த அளவில், தென் சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை - தயாநிதி மாறன், வட சென்னை - கலாநிதி வீராசாமி, ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர் பாலு, காஞ்சிபுரம் - செல்வம், வேலூர் - கதிர் ஆனந்த், அரக்கோணம் - ஜெகத்ரட்சகன், திருவண்ணாமலை - சி.என் அண்ணாதுரை, ஆரணி - தரணி வேந்தன், கள்ளக்குறிச்சி - மலையரசன், தருமபுரி - ஆர். மணி, கோவை - கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி - ஈஸ்வர சாமி, சேலம் - செல்வ கணபதி, ஈரோடு - பிரகாஷ், நீலகிரி - ஆ ராசா, தஞ்சாவூர் - ச.முரசொலி, பெரம்பலூர் - அருண் நேரு, தேனி - தங்க தமிழ்ச்செல்வன், தென்காசி - ராணி ஸ்ரீகுமார், தூத்துக்குடி - கனிமொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தென் மாவட்டங்களில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 7 தொகுதிகளை தனது கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. தென்காசி, தூத்துக்குடி மற்றும் தேனி ஆகிய தொகுதிகளில் மட்டுமே திமுக நேரடியாக களமிறங்கியுள்ளது.

அதிமுகவை பொறுத்த அளவில், 7 தொகுதிகளை தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி 33 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது. இதில் வடசென்னை, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி (தனி) கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி என 18 தொகுதிகளில் திமுகவுடன் நேரடியாக மோதுகிறது.
பாஜகவை பொறுத்த அளவில், மத்திய சென்னை, பொள்ளாச்சி, தென்காசி, தஞ்சாவூர் என 4 தொகுதிகளில் திமுகவுடன் நேரடியாக மோதுகிறது. இந்த தேர்தலில் திமுக vs அதிமுக vs பாஜக vs நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுவதால் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் நிலையில், இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. பங்குனி உத்திரமான நேற்று முன் தினம் மட்டும் 405 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர். தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி உட்பட நேற்று 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இன்று திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறன், திருவண்ணாமலை வேட்பாளர் அண்ணாதுரை, தேனி வேட்பாளர் தங்க தமிழ்செல்வன், அரக்கோணம் வேட்பாளர் ஜெகத்ரட்சகன், நீலகிரி வேட்பாளர் ஆ.ராசா, கோவை வேட்பாளர் கணபதி ராஜ்குமார், விசிக சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவன், காங்கிரஸ் கரூர் தொகுதி வேட்பாளர் ஜோதிமணி, கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் விஜய் வசந்த், நெல்லை வேட்பாளர் ராபர்ட் புரூஸ், திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்தில், விளவங்கோடு வேட்பாளர் தாரகை கத்பர்ட், அமமுக தேனி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

இன்றுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. அதேபோல, மார்ச் 30ம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications