தங்கம்னு சொன்னாலே காசு கேப்பாங்களோ! அதிரடியாய் உயர்ந்த தங்கத்தின் விலை..! இப்போ வாங்கலாமா? வேண்டாமா?
சென்னை: ராக்கெட்டை விட தங்கத்தின் விலை அதிவேகமாக உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், இன்றும் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் விலை என்ன? தங்கம் விலை உயர என்ன காரணம்? இப்போது தங்கம் வாங்கலமா? என்பதை இப்போது பார்க்கலாம்..
2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் விலை அதிக அளவில் உயர்ந்து தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

அதிக அளவில் தங்கத்தில் முதலீடு, தங்கம் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள் உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கம் விலை: இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கத்தின் விலை 500 ரூபாய் அதிரடியாக குறைந்தது. இந்த நிலையில் வழக்கம்போல் இன்று திடீரென தங்கத்தின் விலை அதிகரித்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 6,870 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 54,960 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அதிகரிப்பு: மேலும் 18 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 66 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,628 ரூபாய்க்கும் சவரனுக்கு 528 ரூபாய் உயர்ந்து 43,024 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் தொடர்ந்து பொதுமக்கள் தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்திருப்பதும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என வியாபாரிகள் கருதுகின்றனர்.
நஷ்டமில்லை: மேலும் வரும் காலங்களில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் இருந்தாலும் தங்கத்தில் முதலீடு செய்வது நஷ்டத்தை ஏற்படுத்தாது என கூறும் வியாபாரிகள் ஆபரண தங்கத்தை விட சுத்த தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்கும் என கருதுகின்றனர்.
காரணம் : ஆபரண தங்கத்தை நகைகளாக வாங்கும் போது செய்கூலி சேதாரம் என பத்து முதல் 15 சதவீதம் வரை அதிகரித்து வாங்க வேண்டி இருக்கும். அதே போல விற்பனை செய்யும் போதும் தங்கத்தின் விலை கணிசமாக குறைய வாய்ப்பிருப்பதால் தங்க பிஸ்கட்டுகளாகவும் தங்க காசுகளாகவும் சொக்க தங்கத்தை வாங்குவது பலன் அளிக்கும் என்கின்றனர் வியாபாரிகள்.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது












Click it and Unblock the Notifications