அட்சய திரிதியை.. அலற வைக்கும் தங்கத்தின் விலை? இப்பவே நகைக் கடைக்கு போங்க! இருமுறை உயர்ந்த விலை.!
சென்னை: அட்சய திருதியை நாளான இன்று தங்கத்தின் விலை இருமுறை உயர்ந்து விற்பனையாகி வருகிறது. அதிகாலையில் 360 ரூபாய் கிராமுக்கு விலை உயர்ந்த நிலையில் , 8.30 மணி அளவில் மீண்டும் 360 ரூபாய் உயர்ந்து தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.
2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் விலை அதிக அளவில் உயர்ந்து தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

அதிக அளவில் தங்கத்தில் முதலீடு, தங்கம் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள் உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டு வரும் நிலையில் ஒவ்வொரு நாளுமே தங்கத்தின் விலை உயருமா ? அல்லது இறங்குமா? என சாமானிய மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் அக்ஷய திருதியை நாளான இன்று தங்கம் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு சலுகைகளையும் பரிசு பொருட்களையும் வழங்கி தங்கள் கடைகளுக்கு வாடிக்கையாளர்களை இழுத்து வர நகைக்கடை உரிமையாளர்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றனர்.
எதிர்பார்த்தது போலவே அட்சய திருதியை நாளான இன்று பல்வேறு நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. காலை முதல் ஆளாக தங்கம் வாங்கிவிட வேண்டும் என மக்கள் நகைக்கடையில் கடைகளை நோக்கி வருகின்றனர். பொதுவாக தங்கத்தின் விலை 10 மணியிலிருந்து 11 மணிக்கு மாற்றத்தை சந்திக்கும். ஆனால் இன்று அக்ஷய திருதியை நாள் என்பதை முன்னிட்டு அதிகாலையில் தங்கம் விலை அதிகரித்தது.
நேற்று சென்னையில் இரண்டாவது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தே காணப்பட்டது. வியாழக்கிழமை ஆன நேற்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 52,920 ரூபாய்க்கு விற்பனையானது. புதன்கிழமை ஒரு கிராம் 6,630-க்கும், ஒரு சவரன் 53,040 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில் அக்ஷய திரிதியை நாளான இன்று தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்தது. மக்கள் தங்கம் வாங்க அதிக ஆர்வம் காட்டியதால் விலை உயர்ந்ததாக வர்த்தகர்கள் கூறினர்.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.53,280 ஆக விற்பனையானது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம், ரூ.45 உயர்ந்து, ரூ.6,660க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல், ஒரு கிராம் வெள்ளியின் விலை, ரூ.1.30 உயர்ந்து, ரூ.90க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.90,000க்கு விற்பனையானது. ஆனால் சில மணி நேரங்களிலேயே தங்கத்தின் விலை ஏற்றத்தை சந்தித்தது. காலையில் 360 ரூபாய் உயர்ந்த நிலையில், மீண்டும் 360 ரூபாய் உயர்ந்து அதாவது ஒரே நாளில் கிராமுக்கு 720 ரூபாய் உயர்ந்தது.
அதன்படி இன்று தங்கத்தின் விலை இரண்டாவது முறையாக 360 ரூபாய் உயர்ந்து அதாவது கிராமுக்கு ரூபாய் 720 உயர்ந்து, 53 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து 6705 ரூபாய்க்கும் தங்கம் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை இருமுறை உயர்ந்துள்ளதையடுத்து பொதுமக்கள் தங்கம் வாங்க நகை கடைகளை நோக்கி மீண்டும் படையெடுக்க ஆரம்பித்து இருக்கின்றனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ்












Click it and Unblock the Notifications