தென் தமிழகத்தில் கோடைக்கு இதமாக கொட்டித்தீர்க்கப் போகும் கனமழை... அனுபவிக்கத் தயாராகுங்கள்

தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகதென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமுதல் மிககன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்தாலும் மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), மயிலாடி (கன்னியாகுமரி ) தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது. காயல்பட்டினம் (தூத்துக்குடி ), எட்டயபுரம் (தூத்துக்குடி ), கோவிலங்குளம் (விருதுநகர்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), குருங்குளம் (தஞ்சாவூர்) தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

காரைக்கால் , தென்காசி , பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி ), சூரலக்கோடு (கன்னியாகுமரி), தொண்டி (ராமநாதபுரம் ) தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது. பாம்பன் (ராமநாதபுரம்), ஆய்க்குடி (தென்காசி), திருப்பூண்டி (நாகப்பட்டினம் ), சாத்தான்குளம் (தூத்துக்குடி), தக்கலை (கன்னியாகுமரி), நாகர்கோவில் (கன்னியாகுமரி ) , மதுக்கூர் (தஞ்சாவூர் ), திருச்செந்தூர் (தூத்துக்குடி), வேதாரண்யம் (நாகப்பட்டினம் ) தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

மிககனமழைக்கு வாய்ப்பு

மிககனமழைக்கு வாய்ப்பு

இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்தமிழக மாவட்டங்களில் மிககனமழை

தென்தமிழக மாவட்டங்களில் மிககனமழை

நாளைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிதமான மழை

மிதமான மழை

நாளை மறுநாள் தென்தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14ஆம் தேதியன்று உள்தமிழகம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15 ஆம் தேதியன்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் லேசான மழை

சென்னையில் லேசான மழை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை


இன்றும் நாளையும் தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+