சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"வாகை சூட வா".. தமிழ்நாடு ஒலிம்பிக் வீரர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த கமல்.. திடீர் வீடியோ கால்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் வீடியோ கால் மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

Recommended Video

    Modiயிடம் பேசிய Olympic athletes! Indian Players உடன் Video Conference | OneIndia Tamil

    ஜூலை மாதம் 23ம் தேதி ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் நடக்க உள்ளது. கொரோனாவிற்கு இடையே இந்த போட்டிகள் நடக்க உள்ள நிலையில் இதற்காக பல்வேறு புதிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

    குளத்தில் மூழ்கி 5 பெண்கள் உயிரிழப்பு... ரூ 5 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவுகுளத்தில் மூழ்கி 5 பெண்கள் உயிரிழப்பு... ரூ 5 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    கடந்த வருடம் நடக்க வேண்டிய போட்டிகள் கொரோனா காரணமாக இந்த வருடம் தள்ளி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 8ம் தேதி வரை இந்த போட்டிகள் நடக்க உள்ளன.

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு சார்பாக இந்த போட்டிகளில் பல வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒலிம்பிக்கின் பல்வேறு பிரிவு போட்டிகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து டி.மாரியப்பன், சி.ஏ.பவானி தேவி உள்ளிட்ட 7 தமிழ்நாடு வீரர்கள் தேர்வாகி உள்ளனர். பல்வேறு கிராமப்பகுதிகளை சேர்ந்த வீரர்களை இந்த முறை தமிழ்நாடு ஒலிம்பிக்கிற்கு அனுப்பி வைக்கிறது.

    தடகளம்

    தடகளம்

    இந்த ஒலிம்பிக் தொடரில் தடகள போட்டிகள் ஜூலை 31ல் தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பாக கலந்து கொள்ளும் 26 வீரர்கள் 5 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தனலெட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இந்தியாவில் தடகள பிரிவிற்கு தமிழ்நாட்டில் இருந்துதான் அதிக வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.

     பேசினார்

    பேசினார்

    இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வீடியோ கால் மூலம் ஆலோசனை மேற்கொண்டார். எல்லா வீரர்களையும் ஒன்றாக அழைத்து வீடியோ கால் மூலம் பேசி அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். எல்லா வீரர்களின் தனிப்பட்ட அனுபவம், பின்னணி குறித்து கமல்ஹாசன் கேட்டறிந்தார்.

    நீங்கள்தான்

    நீங்கள்தான்

    நீங்கள் தான் உண்மையான உலக நாயகர்கள். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீங்கள் பங்குபெறுவது தமிழ் மண்ணிற்கு பெருமை. நீங்கள் வெற்றிபெறுவீர்கள், வெற்றி மாலையோடு திரும்புவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உங்களின் பல நாள் பயிற்சிக்கு இந்த தொடரில் பலன் கிடைக்கும் என்று கமல்ஹாசன் வீடியோ காலில் பாராட்டு தெரிவித்தார்.

    ட்விட்

    ட்விட்

    இதுகுறித்து கமல்ஹாசன் செய்துள்ள ட்விட்டில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தமிழகத்திலிருந்து தேர்வான வீரர்களுடன் கலந்துரையாடினேன். தமிழ் வீரமே வாகையே சூடும். நாளை உலகமே இவர்கள் புகழ் பாடும், என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Tokyo Olympics 2020: Kamal Haasan call Tamilnadu Participant and wishes them for success over the video call.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X