Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற சுபா, தனலட்சுமிக்கு அரசு வேலை - பணி நியமன ஆணை அளித்த முதல்வர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங் கேற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சுபா, தனலட்சுமி ஆகிய இரு வீராங்கனைகளுக்கு அரசு வேலைக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங் கேற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சுபா, தனலட்சுமி ஆகிய இரு வீராங்கனைகளை தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலராக நியமித்து முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட சுபாவும், தனலட்சுமியும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளனர்

திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் கிராமத்தைச் சேர்ந்த வெ.சுபா, குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.தனலட்சுமி ஆகியோர் கடந்த ஜூலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 4X400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்று பெருமை சேர்த்தனர்.

Tokyo Olympics: Government Jobs to Suba Venkatesh and Dhanalakshmi CM gave the work order

சர்வதேச அளவிலான 8 போட்டிகளில் பங்கேற்று 3 போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார் சுபா வெங்கடேசன்.. சுபாவுக்கு அரசுப்பணி கிடைக்கவில்லை என்று ஏற்கனவே ஒருபேட்டியில் வருத்தம் தெரிவித்திருந்தார்.. மேலும் இந்த போட்டியில் முழு திறனையும் வெளிப்படுத்தி பதக்கத்தை வெல்ல முடியும் என்றும் நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.

கடும் சிரமத்துடன், மிகுந்த வறுமையிலும் போராடி ஒலிம்பிக் வரை சென்றுள்ள சுபா வெங்கடேசன், தனலட்சுமிக்கு அரசு வேலை வழங்க முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டார். இருவரும் தாயகம் திரும்பிய உடன் அரசு பணிக்கான ஆணையை வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியிருந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற சுபா, தனலட்சுமி ஆகிய இருவரையும் கவுரவப்படுத்தும் வகையில், இருவருக்கும் தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் திங்கட்கிழமையன்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட சுபாவும், தனலட்சுமியும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளனர். எங்களுக்கு வேலை கிடைத்ததில் குடும்பத் தினரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழக அரசின் இந்த செயல், இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது என்று கூறினர்.

எங்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான அறிவிப்பை ஒலிம்பிக்கில் பங்கேற்றுவிட்டு, நாடு திரும்புவதற்கு முன்பாகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். அதன்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளோம். திருச்சி அலுவலகத்தில் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

இதற்கான ஆணையை வழங்கிய முதல்வர், 'விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று தமிழகத்துக்குப் பெருமை சேர்க்க வேண்டும்' என வாழ்த்தியதாகவும் கூறினார். அரசு வேலை மட்டுமின்றி பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்கச் செல்வதற்காக அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் எனவும் அவர் உறுதியளித்தார். அவரது வாழ்த்தும், பாராட்டும் எங்களுக்கு மேலும் ஊக்கமளித்துள்ளதாகவும் கூறினர். சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று தமிழக அரசுக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கும் பெருமை சேர்ப்போம் என்றும் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+